உலகின் மிகப்­பெ­ரிய செங்­குத்­தான பசுமைத் தோட்­டம்..!!

Read Time:2 Minute, 24 Second

1789article-2398398-1B6071B0000005DC-251_634x42210 ஆயி­ரத்­திற்கு அதி­க­மான தாவ­ரங்­க­ளைக் ­கொண்டு பிரித்­தா­னி­யாவின் மத்­திய லண்­டனில் 68 அடி உய­ரான சுவரில் செங்­குத்­தான தோட்டம் ஒன்று உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த செங்­குத்­தான பசு­மைத் தோட்­ட­முள்ள சுவர் விக்­டோ­ரியா ஸ்டேஷ­னுக்கு அண்­மையில் உள்­ளது.

கண்­க­வரும் வகை­யி­ல­மைந்­துள்ள செங்­குத்து தோட்­டத்­தினால் கடும் மழை­கா­லத்தில் மத்­திய லண்­டனில் வெள்ளம் ஏற்­ப­டு­வ­தனை தவிர்க்க முடியும் என வல்­லு­நர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

10 ஆயி­ரம் தாவ­ரங்­களில் பட்­டர்கப்ஸ், ஸ்டோபரி என 20 பரு­வ­கால தாவ­ரங்கள் உள்­ளதாம்.

இத்­திட்­ட­மா­னது லண்டன் மேயர் பொரிஸ் ஜோன்­ஸனால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. தலை­ந­கரின் சூழல் சவால்­களை எதிர்­கொள்ளும் நோக்­கி­லேயே இத்­தோட்டம் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது.

கெரி க்ரேன் ஒப் க்ரீன் ரூப் கொன்­ஸல்டிங் எனும் நிறு­வ­னத்­தினால் வடி­வ­மைக்­கப்பட் இச்­சு­வரை ட்ரீபொக்ஸ் எனும் நிறு­வனம் பாரா­ம­ரிக்­கின்­றது.

இது குறித்து ட்ரீபொக்ஸ் நிறு­வ­னத்தின் முகா­மை­யாளர் ஆர்­மன்டோ கூறு­கையில், வருடம் முழு­வதும் இச்­சுவர் பூத்­துக்­கு­லுங்கும். பற­வைகள், வண்­ணத்­துப்­பூச்­சிகள், வண்­டுகள் என உயிரின் பல்­வ­கை­மையும் விக்­டோ­ரி­யாவில் பேணப்­படும்.

உயிர்ப்­பல்­வ­கை­மையை இது ஊக்­கு­விக்க உதவும். அத்­துடன் சுற்­றுச்­சூ­ழலும் இயற்­கையாக மாறும் எனத் தெரி­வித்­துள்ளார்.

இதற்கு முதல் இதே­போன்­ற­தொரு 2005ஆம் ஆண்டு ஐலிங்டன் நகரில் உருவாக்கப்பட்டது. ஆனால் நீர் வழங்கல் முறைகள் திருப்தியளிக்காமல் தாவரங்கள் இறக்க அத்திட்டம் முடிவுக்கு வந்தது.

1789article-2398398-1B6071B0000005DC-251_634x422 1789article-2398398-1B60718C000005DC-690_634x377 1789article-2398398-1B608308000005DC-110_634x422

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரயில் எஞ்சினை உடலில் கட்டி இழுத்த மனிதர்கள்..!!
Next post ஒரு நிமிடம் மட்டுமே அனந்தி-நவீபிள்ளை சந்திப்பு..!!