கொக்கிளாய் மக்களால் விரட்டியடிக்கப்பட்ட ஆளும் கட்சி வேட்பாளர்..!!

Read Time:1 Minute, 53 Second

download (2)நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில்  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் இரட்ணராஜா என்பவர் வாக்கு வேட்டைக்காக கொக்கிளாய் சென்ற போது அந்தக் கிராம மக்களால் அடித்து துரத்தப்பட்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் பணியாற்றிய இரட்ணராஜா என்பவர் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிருக்கின்றார்.

குறித்த நபர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்குச் சொந்தமான வாகனத்தில் இன்று நண்பகல் கொக்கிளாய் கிராமத்திற்கு வாக்குச் சேகரிப்பதற்காகச் சென்றிருக்கின்றார்.

 அங்கு திரண்ட அந்தக் கிராம மக்கள் அவர் மீது தாக்குதல் நடத்தி அவரை விரட்டியடித்தாக அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

எமது மக்களைக் கொன்று குவித்த அரசாங்கத்திற்கு சார்பாக வாக்குச் சேகரிக்கச் சென்றமையைக் கண்டித்த மக்கள் அவரை த்திட்டித் தீர்த்ததுடன் அவர் மீது தாக்குதல் நடத்தி அவரை விரட்டியடித்ததாக அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

வன்னியில் இருந்து அதிரடி இணையத்தள செய்தியாளர் எல்லாளன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழர்களை தீவிரவாதிகளாக சித்திரிக்கும் மெட்ராஸ் கபேக்கு தடை கோரிய மனு ரத்து..!!
Next post பத்தன பகுதியில் ஒருவர் போத்தலால் குத்திக்; கொலை..!!