செவ்வாய்க் கிரகத்தில் குடியேறும் திட்டத்திற்கு 100 ஆயிரம் விண்ணப்பங்கள் : இலங்கையர் இருவர் விண்ணப்பிப்பு..!!

Read Time:2 Minute, 41 Second

1624marsone (1)இலாப நோக்கமற்ற மார்ஸ் வன் எனும் டச்சு நிறுவனமொன்று செவ்வாய்க் கிரகத்திற்கு மனிதர்களை இலவசமாக அனுப்பி அங்கு குடியேற்றும் திட்டத்திற்கு இதுவரையில் 100 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மார்ஸ் வன் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இத்திட்டத்தில் ஒரு வழிப்பயணத்துக்கான டிக்கெட்டினை மட்டும் வழங்குவதுடன் பயணம் செல்லும் நபர் விரும்பினாலும் மீண்டும் பூமிக்கு திருப்பி அனுப்பப்படமாட்டார்.

இருப்பினும் இத்திட்டத்திற்கு உலகளவில்பலத்த வரவேற்று கிடைத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி முதல் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றதன. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் இதுவரையில் ஒரு இலட்சத்திற்கு அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

செவ்வாய்க்கு குடியேறும் திட்டத்திற்கு இலங்கையிலிருந்து டிலிப (26)இ மதுர (33) ஆகிய இருவர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களது விபரங்களை http://applicants.mars-one.com/?sex=&minimumAge=&maximumAge=&country=LK&language=&rating=#sthash.4PwR5Flj.dpuf இணையத்தளத்தின் மூலமாக அறிந்துகொள்ளலாம்.

இலவசமாக செவ்வாயில் குடியேற்றும் இத்திட்டத்தில் பங்குகொள்வதற்கு மட்டும் விண்ணப்பிக்கும் நாட்டினைப் பொறுத்து விண்ணப்ப கட்டணம் 5–-40 அமெரிக்க டொலர்கள் வரை அறவிடப்படுகின்றது.

விண்ணபிப்பவர்களில் 40 பேர் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்டு 20–22ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செவ்வாய்க்கு அனுப்பப்படவுள்ளனர்.

இதில் அமெரிக்காஇ ரஷ்யாஇ சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 20-–40 வயதிற்குட்பட்டவர்களே அதிகளவில் இத்திட்டத்தில் இணைய ஆர்வம் காட்டுகின்றனர். இதில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்ப முடிவுத் திகதி குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

1624marsone (1)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எகிப்து கலவரம்: பலியானோர் எண்ணிக்கை 638ஆக உயர்வு..!!
Next post லெபனன் கார் குண்டு தாக்குதலில் 20 பேர் உயிரிழப்பு..!