மனைவியைக் கொன்று பேஸ்புக்கில் படம், தகவல் பரிமாறிய நபர் கைது..!!
மனைவியைக் கொன்று, அவரது சடலத்தை புகைப்படங்களாக பேஸ்புக்கில் வெளியிட்ட அமெரிக்கக் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மகாணத்தைச் சேர்ந்தவர் 31 வயது டெரக் மெடினா. இவரது மனைவி ஜெனிபர் அல்போன்சா, வயது 26. இவர்களுக்கு 10 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
டெரக் தனது மனைவியைக் கொன்று அவரது புகைப்படங்களை பேஸ்புக்கில் போட்டுள்ளார். கூடவே, பேஸ்புக் நண்பர்களுக்கு செய்தியும் வெளியிட்டுள்ளார். அதில், ‘விரைவில் என்னை செய்திகளில் பார்க்கலாம். நான் என் மனைவியைக் கொன்று விட்டேன். இதற்காக சிறைக்குச் செல்கிறேன்.
உங்களை எல்லாம் மிகவும் மிஸ் செய்வேன்ய் என உருக்கத்தைப் பொழிந்ததோடு, மனைவியின் சடலப் போட்டோக்களையும் அத்தோடு இணைத்துள்ளார். அதில், இரத்த வெள்ளத்தில் ஜெனிபர் பிணமாகக் கிடக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. மனைவியை சுட்டுக் கொன்ற போட்டோக்களை பேஸ்புக்கில் தரவேற்றம் செய்தவுடன், மியாமி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
டெரக் எதற்காக தனது மனைவியைக் கொலை செய்தார் என்ற காரணம் தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை. அது குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டெரக்கின் தந்தை இது குறித்து பொலிஸாரிடம் கூறுகையில், ‘தனது மகன் குடும்ப சண்டை காரணமாக மனைவியை இவ்வாறு கொடூரமாகக் கொன்றிருக்கலாம் எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating