400 கிலோ எடையுள்ள இளைஞரின் வைத்தியசாலை பயணத்துக்காக வீட்டின் சுவர் உடைப்பு..!!

Read Time:2 Minute, 42 Second

15341சுமார் 400 கிலோ­கிராம் எடை­யுள்ள இளைஞர் ஒரு­வரை வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்­வ­தற்­காக அவரின் வீட்டின் சுவரை உடைத்து வெளியே எடுத்து, கெட்­டர்­பில்லர் வாக­னத்தில் ஏற்றிச் சென்ற சம்­பவம் ஜேர்­ம­னியில் இடம்­பெற்­றுள்­ளது.

மைக்கல் லெபேர்கர் எனும் இந்த இளைஞர்  ஜேர்­ம­னியின் ரீகல்ஸ்பேர்க் நகரில் வசிக்­கிறார். அண்­மையில் அவ­ருக்கு திடீ­ரென மார­டைப்பு ஏற்­பட்­ட­போது அவ­ச­ர­மாக வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்ல வேண்­டி­யி­ருந்­தது.

ஆனால், 400 கிலோ எடையைக் கொண்­டி­ருந்த மைக்கல் லெபேர்­கரை தூக்கிச் செல்ல முடி­ய­வில்லை. அதை­ய­டுத்து அவ­சர சேவைப் பிரி­வி­ன­ருக்கு தகவல் கொடுக்­கப்­பட்­ட­வுடன் தீய­ணைப்புத் துறை­யி­னரும் மருத்­துவ ஊழி­யர்­களும் விரைந்து வந்­தனர். ஆனால் அவ்­வீட்டின் கத­வுக்­கூ­டாக மைக்­கலை தூக்­கிச்­செல்ல முடி­ய­வில்லை. அதனால் ஜன்­ன­லுடன் இணைந்த சுவ­ரொன்றை உடைக்க வேண்­டி­யி­ருந்­தது.

மண் அகழ்­வுக்குப்  பயன்­ப­டுத்­தப்­படும் கெட்­டர்­பில்லர் இயந்­தி­ரத்தின் மூலம் வீட்­டி­லி­ருந்து பாது­காப்­பாக தூக்­கி­வ­ரப்­பட்டு மைக்கல், நான்கு நோயா­ளிகள் பயணம் செய்­வ­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட அம்­பியூலன்ஸ் வாகனம் மூலம் வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்­லப்­பட்டார்.

29 வய­தான மைக்கல் லெபரை வீட்டிலி­ருந்து வெளியே கொண்­டு­வ­ரு­வது முதல் அரு­கி­லுள்ள வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்­வது வரை­யான பணிக்கு சுமார் 6 மணித்­தி­யா­லங்கள் தேவைப்­பட்­டன.

இந்­ந­ட­வ­டிக்­கையை மேற்­கொண்ட குழுவின் தலைவர் வோல்கர் கிளெய்ன் கருத்துத் தெரிவிக்கையில், தனது வாழ்க்கையில் இவ்வாறான ஒரு நிலைமையை முன்னர் ஒருபோதும்  எதிர்கொண்டதில்லை எனக் கூறியுள்ளார்.

15344 15341

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நெஞ்சம் இரண்டாக பிளந்தநிலையில் இளைஞன் சடலமாக மீட்பு..!!
Next post மதுபோதையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்திய பிக்குக்கு அபராதம்..!!