இயேசுவுக்கு மரணதண்டனை: சர்வதேச நீதிமன்றில் வழக்கு..!!

Read Time:3 Minute, 52 Second

1518Jesusஇயேசு கிறிஸ்­து­வுக்கு சுமார் 2000 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் முறை­யற்ற விதத்தில் மர­ண­தண்­டனை விதிக்­கப்­பட்­ட­மைக்கு எதி­ராக சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் வழக்குத் தொட­ர­வுள்­ள­தாக கென்­யாவைச் சேர்ந்த சட்­டத்­த­ரணி ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

கென்­யாவின் நீதி­மன்­றங்­களின் அமைப்பின் முன்னாள் பேச்­சா­ள­ரான டோலா இன்­டிடிஸ் என்­ப­வரே இவ்­வாறு வழக்குத் தொட­ரப் ­போ­வ­தாக அறி­வித்­துள்­ள­துடன் முறைப்­பா­டொன்­றையும் செய்­துள்ளார்.

இத்­தா­லிய குடி­ய­ரசு, இஸ்ரேல் மற்றும் பல­ருக்கு எதி­ராக அவர் வழக்குத் தொட­ரப்­ப­போ­வ­தாக அறி­வித்­துள்ளார்.

‘2000 வரு­டங்­க­ளுக்கு பல அதி­ச­யங்­களை நிகழ்­திய கட­வுளின் மகன் இயே­சு­வுக்கு சட்­டத்­திற்கு புறம்­பாக சித்­தி­ர­வதைகுட்­ப­டுத்தி மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

கட­வு­ளுக்கு எதி­ராக குற்றம் புரி­வ­தாக குற்றம் சாட்­டப்­பட்டு யூதர்­க­ளினால் கைதுசெய்­யப்­பட்ட இயேசு குற்­ற­மற்­றவர் என ரோமன் ஆளுநர் பொன்­டியஸ் பிலாத்து கூறிய பின்பும் இயே­சு­வுக்கு மரண தண்­டனை வழங்­கப்­பட்­டுள்­ளது’ என டோலா இன்­டிடிஸ் தெரி­வித்­துள்ளார்.

‘என்ன குற்­றத்­திற்­கான இயே­சு­விற்கு மரண தண்­டனை வழங்­கப்­பட்­டது? ‘ எனக் கேள்வி எழுப்­பி­யுள்ள அவர், சட்­டத்தை நிலை­நாட்­டாது ரோமன் நீதி­மன்றம் தவ­றி­ழைத்­துள்­ளது. மேலும் அங்கு மனித உரி­மையும் மீறப்­பட்­டுள்­ள­தென தெரி­வித்­துள்ளார்.

இதனால் முறை­யற்ற விதத்தில் தண்­டனை வழங்­கிய இத்­தா­லிய குடி­ய­ரசு மற்றும் இஸ்ரேல் மற்றும் பல­ருக்கு எதி­ராக வழக்­குத்­தொ­டுக்க முயற்­சிக்­கின்றார் சட்­டத்­த­ரணி இன்­டிடிஸ்.

பிரெஞ்சு வீர­மங்கை ஜோன் ஒவ் ஆர்க்கை ஆங்­கி­லே­யர்கள் விசா­ரணை நடத்­தி­யமை தண்­டனை வழங்­கி­யமை முறை­யற்­றது என பின்னர் கண்­ட­றி­யப்­பட்­டதைப் போல் இயேசு கிறிஸ்­துக்கு விதிக்­கப்­பட்ட தண்­ட­னையும் முறை­யற்­ற­தாக  பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென லோடஸ் இன்­டிடிஸ் தெரிவித்துள்ளார்.

இவ்­வி­டயம் தொடர்பில் இன்­டி­டி­ஸுக்கு வெற்றி கிடைக்­காது ஏன கரு­தப்­ப­டு­கி­றது. ஏனெனில் சர்­வ­தேச நீதி­மன்றம் நாடு­க­ளி­டை­யே­யான பிணக்­குகள் தொடர்­பி­லான சட்­ட­வ­ரம்­பு­க­ளையே கொண்­டுள்­ளது. எனவே இவ்­வ­ழக்­கினை சர்­வ­தேச நீதி­மன்றம் ஏற்­காது என சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

இவ்வழக்கானது நாடொன்றினால் தாக்கல் செய்யப்படாததால்  இது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின்  அதிகாரத்துக்கு உட்படாது எனன கொலம்பிய சட்டக் கல்லூரியின் பேராசிரியர் அந்தியா ரொபர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

1518Jesus 1518Kenya-lawyer-Indidis

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 15 வயதான சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; சகோதரியின் கணவர் சந்தேகத்தில் கைது..!!
Next post கள்ளக் காதலியின் 2 மாத குழந்தையை ‘ஆன்லைனில்’ 100 டாலருக்கு விற்க முயன்றவன் கைது..!!