பாகிஸ்தான் பெண்கள் தனியாக சொப்பிங் செல்லத் தடை..!!

Read Time:1 Minute, 40 Second

downloadபாகிஸ்தானில், ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், பழங்குடியினர் அதிகம் வசிக்கின்றனர்.

இங்கு பெண்கள் கல்வி கற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி, பெண்கள் பள்ளிக்கு சென்றதால், அந்த பள்ளிக்கூடங்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டு விட்டன.

இங்கு வசிக்கும் பெண்கள், தலை முதல் பாதம் வரை முழுவதும் மூடும் வகையில் உடையணிய வேண்டும். இதற்கிடையே, இங்குள்ள பெண்கள், தனியாக கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்க, இப்பகுதியின், பழங்குடி இனத் தலைவர்கள் தடை விதித்துள்ளனர்.

கரக் மாவட்டத்தில் நடந்த மதத் தலைவர்கள் கூட்டத்தில், ‘ஆண்களின் துணையுடன் தான், பெண்கள் கடைகளுக்கு செல்ல வேண்டும்’ என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின் ஒலிபெருக்கி மூலம், இந்த தகவல் அறிவிக்கப்பட்டது.

பழங்குடி இன தலைவர் மவுலானா மிர்ஜாகிம், இது குறித்து குறிப்பிடுகையில், ”தனியாக செல்லும் பெண்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கும். ரம்ஜான் மாதத்தையொட்டி, பெண்கள் விதவிதமாக உடையணிவது, ஆண்களின் விரதத்தை பாதிக்கிறது, என்று கூறியுள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிளிமூக்கு’ மீனுக்கு டாட்டூஸ் குத்தும் சீன வாஸ்துப் பிரியர்கள்..!!
Next post சர்வாதிகாரப் போக்கில் கூட்டமைப்பு : அரசாங்கம் குற்றச்சாட்டு..!!