இந்திய சிறுமிக்கு மலாலா விருது…!!

Read Time:1 Minute, 42 Second

955179022up-girlகல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ராஜியா என்பவர், ஐ.நா வழங்கும் மலாலா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த பள்ளிச் சிறுமியான மலாலா, குழந்தைகள் மத்தியில் கல்வியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதால் தலிபான்களால் துப்பாக்கியால் சுடப்பட்டார். இதனை தொடர்ந்து உலகளவில் பிரபலமானார்.

அவரது சேவையை பாராட்டி, அவரது பிறந்தநாளான நேற்று, மலாலா தினமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஐக்கிய நாடுகள் சபையில், மலாலா நேற்று உரையாற்றினார்.

இந்நிலையில், அவரை போன்று கல்விக்காக சேவை புரிவோருக்கு, மலாலா விருதை ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.. இதன் முதல் விருதுக்கு, உத்தரபிரதேசத்தின் மீரட் நகரைச் சேர்ந்த ராஜியா சுல்தானா, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

குழந்தை தொழிலாளர்களாக இருந்த ஏராளமானோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை பள்ளிக்கு அனுப்பி வருகிறார் ராஜியா. இதற்காக அவரை மலாலா விருதுக்கு ஐ.நா. சபை தேர்வு செய்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளவரசன் உடல் சென்னையில் மறு பிரேதப் பரிசோதனை!!
Next post கவர்ச்சி காட்டச் சொன்னால் காட்ட மாட்டேன்!!