24 சிறுவர்கள்மீதான துஷ்பிரயோகத்தை மறைக்க 450 கோடி ரூபா செலவிட்ட ஜக்ஸன்-பொப்!!
பிசை சக்கரவர்த்தி என வர்ணிக்கப்படும் மறைந்த பாடகர் மைக்கல் ஜக்ஸன், குறைந்த பட்சம் 24 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகவும் இவ்விடயத்தை அவர்கள் வெளியே சொல்லாமல் இருப்பதற்காக 3.5 கோடி அமெரிக்க டொலர்களை (சுமார் 450 கோடி இலங்கை ரூபா) செலவிட்டதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தனது 49 ஆவது வயதில் மறைந்தவர் மைக்கல் ஜக்ஸன். 1993 ஆம் ஆண்டு 2005 ஆம் ஆண்டு அவர் புகழின் உச்சியில் இருந்த காலத்திலேயே சிறுவர் பாலி யல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. 1993 ஆம் ஆண்டு 13 வயதான ஜோர்டன் சான்ட்லர் எனும் தனது மகனை மைக்கல் ஜக்ஸன் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஈவான்ட் சாண்ட்லர் என்பவர் குற்றம் சுமத்தினார்.
பின்னர் அவருக்கு பணம் வழங்கி, இவ்விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவந்தார் ஜக்ஸன். பின்னர் கெவின் ஏர்விஸோ எனும் சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக 2005 ஆம் ஆண்டு ஜக்ஸன் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. அவ்வழக்கிலிருந்து மைக்கல் ஜக்ஸன் விடுதலையானார். நெவர்லேண்ட் என பெயரிடப்பட்ட தனது பிரமாண்ட இல்லத்துக்கு அழைக்கப்பட்ட எந்த சிறுவனும் துஷ்பிரயோகத்துக்கு உட்படவில்லை என மைக்கல் ஜக்ஸன் வலியுறுத்தினார். எனினும், 15 வருடகாலத்தில் குறைந்தபட்சம் 24 சிறுவர்களை அவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகவும் அவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் மௌனமாக்குவதற்காக 3.5 கோடி அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளமை அமெரிக்க புலனாய்வு அமைப்பான எவ்.பி.ஐ.யின் இரகசிய ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளதாக பிரித்தானிய பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.
எவ்.பி.ஐ.யின் மேற்படி ஆவணங்களுக்கு ஊயுனுஊநு ஆது -02463 மற்றும் ஊசு 01046 என பெயரிடப்பட்டிருந்தது. எனினும், 2005 ஆம் ஆண்டு மைக்கல் ஜக்ஸனுக்கு எதிரான வழக்கு நடைபெற்றபோது வழக்குத் தொடுநர்களுக்கு அந்த ஆவணங்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை. ஒரு தடவை பிரபலமான குழந்தை நட்சத்திரம் ஒருவரின் அங்கங்களை மைக்கல் தொடுவதையும், மற்றொரு சிறுவனை துஷ்பிரயோகம் செய்துகொண்டு அவர் ஆபாசப் படங்களை பார்த்துக்கொண்டிருந்ததையும் மற்றவர்கள் கண்டதாக கூறப்படுகிறது. இன்னொரு சிறுவனை அவர் துஷ்பிரயோகம் செய்யும்போது அச்சிறுவனின் தாய் நடப்பது எதையும் அறியாமல் சில வரிசைகளுக்கு அப்பால் அமர்ந்து படம் பார்த்துக்கொண்டிருந்தாராம்.
மேற்படி ஆவணங்கள் 1989 ஆம் ஆண்டளவில் தனியார் புலனாய்வாளரான அந்தனி பெலிகனோ என்பவரால் தொகுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தன்னைப் பற்றிய தகவல்கள் வெளிவராமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மைக்கல் ஜக்ஸனால் பணிக்கு அமர்த்தப்பட்டவர்தான் அந்தனி பெலிகனோ. மைக்கல் ஜக்ஸனுடன் தொடர்பில்லாத வேறொரு வழக்கில் கப்பம் வசூலித்தல், தொலைபேசி உரையாடல்களை பதிவுசெய்தல் போன்ற குற்றச்சாட்டுகளுக்காக 15 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அந்தனி பெலிகனோ. அவரின் முன்னாள் உதவியாளர் ஒருவர்தான் மேற்படி இரகசிய ஆவணங்கள் குறித்த தகவலை த சண்டே பீப்பள் எனும் பிரித்தானிய பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார். மைக்கல் ஜக்ஸன் துஷ்பிரயோகப்படுத்தியதாக கூறப்படும் சிறுவர்களில் 17 பேரை அந்தனி பெலிகனோ அடையாளப்படுத்தியுள்ளார். அவர்களில் திரைப்பட, தொலைக்காட்சி குழந்தை நட்சத்திரங்கள் ஐவர், நடனக் கலைஞர்கள் இருவர் ஆகியோரும் அடங்குகின்றனர்.
ஏனைய சிறுவர்களில் ஐரோப்பாவை சேர்ந்த சிறுவனொருவன், திரைக்கதை எழுத்தாளர் ஒருவரின் மகன்கள் ஆகியோரும் அடங்குகின்றனர். துஷ்பிரயோகங்கள் குறித்த தகவல்களை கசிய விடாமல் இருப்பதற்காக குறைந்தபட்சம் 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு மைக்கல் ஜக்ஸன் பணம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. மைக்கல் ஜக்ஸனுடன் நட்பாக இருந்த 13 வயதான பாடகரான ஜோர்டன் சான்ட்லருக்கு வழங்கப்பட்ட 2 கோடி டொலர் டொலர்களும் மேற்படி 3.5 கோடி டொலர் தொகையில் அடங்கும். மற்றொரு பிரபலமான குழந்தை நட்சத்திரம் ஒருவரின் குடும்பத்தினர் ஊடகங்கள், நூல் வெளியீட்டாளர்களுடன் தொடர்பு கொள்வதற்கு 6 இலட்சம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டதாம். தனது இளம் வயதில் தன்னை மைக்கல் ஜக்ஸன் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக அவுஸ்திரேலிய நடனக் கலைஞர் வாட் ரொப்ஸன் அண்மையில் வழக்குத் தொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கு தொடுக்கப்பட்ட சில நாட்களின்பின் சிறுவர் துஷ்பிரயோகத்தை மறைப்பதற்கு மைக்கல் ஜக்ஸன் பணம் வழங்கியமை குறித்து தகவல் வெளியானது. தற்போது 30 வயதான வாட் ரொப்ஸன், தனது 7 வயது முதல் 14 வயதுவரை மைக்கல் ஜக்ஸனால் துஷ்பிரயோகத்துக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால், பல வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற மைக்கல் ஜக்ஸனுக்கு எதிரான வழக்கில் மைக்கல் ஜக்ஸனுக்கு ஆதரவாக சாட்சியமளித்தவர் வாட் ரொப்ஸன் என்பது குறிப்பிடத்தக்கது. மைக்கல் ஜக்ஸன் மரணத்தின் பின்னரும் அவர் தொடர்பான சர்ச்சைகள் குறைந்துவிடவில்லை. மைக்கல் ஜக்ஸனின் மரணத்துக்கு 400 கோடி டொலர் (சுமார் 50,000 கோடி ரூபா) நஷ்ட ஈடு கோரி ஏ.ஈ.ஜி எனும் நிறுவனத்துக்கு எதிராக ஜக்ஸனின் தாயார் மற்றும் குடும்பத்தினர் வழக்குத் தொடுத்துள்ளனர்.
அதேவேளை, மைக்கல் ஜக்ஸன் குறித்தும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவரின் 3 பிள்ளைகளில் மூத்தவர்கள் இருவரும் வேறு நபரின் உயிரணுக்கள் மூலம் பிறந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. அதேவேளை அவரின் 15 வயது மகளான பரிஸ் ஜக்ஸன், அண்மையில் தற்கொலைக்கு முயன்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating