கடவுளுக்காக அர்பணிக்கப்பட்டு,500 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட சிறுமி!!(PHOTOS)
இறந்து 500 வருடங்களுக்கு மேலாகியும், இன்னும் உடலில் உள்ள இரத்தம் கூட உறையாத மூன்று மம்மிக்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அர்ஜெண்டினாவின் லுல்லைலிகோ மலையில் கடந்த 1999ம் ஆண்டு சுமார் 6739 மீற்றர் ஆழத்தில் மூன்று மம்மிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மதத்தின் பெயரால், பனியில் புதைக்கப்பட்ட இச்சிறுமிக்கு லா டென்சிலா, அதாவது திருமணமாகாத இளம் பெண் என ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டுள்ளனர்.
மேலும் இன்கா இனத்தை சேர்ந்த இப்பெண் கடவுளுக்காக அர்பணிக்கப்பட்டு, கடவுளுடன் வாழ ஆசைப்பட்டு, மதத்தின் பெயரால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த டென்சிலாவின் உடல்களில் பாகங்கள் எதுவும் கெட்டுப் போகவில்லையாம், இரத்தம் கூட உறையாத அளவிற்கு பதமாக பாதுகாப்பாக இருந்திருக்கின்றன. தோல் கூட புத்துணர்ச்சியுடன் இருப்பது தான் ஆச்சர்யம்.
இந்நிலையில் அவளது முடியை வைத்து, அவள் என்ன மாதிரியான உணவுப் பழக்க வழக்கக்களைக் கொண்டவள் என ஆராய்ந்ததில், இன்கா மக்கள் தங்கள் குழந்தைகளை நன்கு கொழுக்க வைத்து கடவுளுக்கு அர்ப்பணித்தது தெரிய வந்துள்ளதாம்.
கடவுளுக்கு அர்ப்பணிப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே, விலங்கு கொழுப்புகள் மற்றும் தானியங்களைக் கொடுத்து அக்குழந்தைகளை நன்கு செழிப்பாக்குவார்களாம் அவர்கள் குடும்பத்தார்.
டென்சிலாவின் வயிற்றுப்பகுதியை ஆய்வு செய்த போது, அவள் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஏதோ காய்கறி போன்ற உணவை உட்கொண்டிருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
டென்சிலாவின் உடல் இருந்த நிலையை வைத்து பார்க்கும் போது, அவள் இறப்பதற்கு முன்னதாக ஏதேனும் மருந்து உட்கொண்டிருக்கலாம், அதன் மூலம் அவளது மரணம் நிகழ்ந்திருக்கலாம் என யூகிக்கின்றனர் ஆய்வாளர்கள்.
இன்காக்கள் இவ்வாறு அர்ப்பணிக்கப் பட்டவர்களை மலையின் உச்சிக்கு சுமந்து செல்வார்களாம்.
அந்த மலைப்பயணம் மிகவும் அபாயகரமானதாகவும், சிரமமானதாகவும் அமைந்திருக்குமாம்.
இலக்கை அடைந்தவுடன் குடிக்க ஒரு மருந்து திரவம் தரப்படுமாம். அதன் மூலம் வலி, பயம் மற்றும் எதிர்க்கும் மனோபாவம் இல்லாமல் போய்விடுமாம்.
பின்னர் அவர்களை உடன் சென்றவர்களே மூச்சுத் திணறச் செய்தோ, தலையில் ஓங்கி அடித்தோ அல்லது பனியில் உறைய விட்டோ பலி கொடுப்பார்களாம்.
நிறைய இன்கா குழந்தைகள் இதுபோல் திருவிழாவின் போதோ அல்லது சாதாரண நாட்களிலோ பலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating