ஐரோப்பாவிலும் டுனிஷியாவிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள டொப்லெஸ் ஆர்ப்பாட்டங்கள்!!
அரைநிர்வாணமாக ஆர்ப்பாட்டம் செய்யும் ஐரோப்பிய பெண்கள் குழுவொன்றின் நடவடிக்கையினால் ஆபிரிக்க நாடான டுனிஷியாவிலும் ஐரோப்பாவிலும் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. உக்ரைனை தளமாகக் கொண்ட பெண்கள் குழுவொன்று டொப்லெஸ்ஸாக வீதிகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதில் பிரபலமானது. ‘பிமென் எனும் இக்குழு தம்மை பெண்ணியல்வாத குழுவெனக் கூறிக்கொள்கிறது. இவர்களின் அங்கத்தவர்கள் பலர் வெளிநாடுகளிலும் உள்ளனர். இக்குழுவின் அங்கத்தவரான டுனிஷியாவைச் சேர்ந்த ஆமினா ஸ்போய் (ஆமீனா டெய்லர்) எனும் பெண் டொப்லெஸ் புகைப்படமொன்றை பேஸ்புக் இணையத் தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதனால் அப்பெண் டுனிஷிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அதையடுத்து, ஐரோப்பாவிலுள்ள ‘ஃபிமென்’ குழு அங்கத்தவர்கள் கிளர்ந்தெழுந்தனர். அக்குழுவின் பிரான்ஸைச் சேர்ந்த பெண்கள் இருவரும் ஜேர்மனியைச் சேர்ந்த பெண்ணொருவரும் டுனிஷியாவுக்கே சென்று அந்நாட்டின் பிரதான நீதிமன்ற கட்டடத் தொகுதியின் முன்னால் டொப்லெஸ்ஸாக ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர். அரபு நாடொன்றின் இந்தளவு பகிரங்கமாக டொப்லெஸ் பெண்களின் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றமை இதுவே முதல்தடவையாகும். டுனிஷியா பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்து இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அப்பெண்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அதையடுத்து இக்கைதுகளுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளிலும் மேற்படி குழுவைச் சேர்ந்த பெண்கள் வீதிகளில் டொப்லெஸ் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர். அமீனா டெய்லர் மற்றும் கைது செய்யப்பட்ட ஐரோப்பிய பெண்கள் மூவருக்கு எதிரான வழக்கு நேற்றுமுன்தினம் விசாரிக்கப்பட்டபோது, பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலும் பெல்ஜியத் தலைநகர் பிரசல்ஸிலும் உள்ள டுனிஷிய தூதரகங்களுக்கு முன்பாக பெண்கள் பலர் டொப்லெஸ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் அன்றைய தினம் தன் மீதான வழக்குக்காக டுஷினிய நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட நீதிமன்றில் ஆஜரான ஆமினா டெய்லரும் ஏனைய பெண்கள் மூவரும் டுனிஷிய பெண்களின் பாரம்பரிய பாணியில் ஆடை அணிந்திருந்தனர். இப்பெண்களுக்கு எதிரான வழக்கில் தாமும் இணைந்துகொள்வதற்காக இவ்வழக்கு விசாரணைகளை தாமதப்படுத்துமாறு டுஷினியாவிலுள்ள இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. அதேவேளை, டொப்லெஸ் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக டுனிஷியாவுக்கு வந்ததாக சந்தேகிக்கப்படும் மேலும் மூன்று பெண்கள் நேற்று முன்தினம் அங்கிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating