நஸ்ரியாநசீமுக்கு தமிழ் வசனங்களை புரிய வைத்த ஜெய்!!

Read Time:2 Minute, 7 Second

imagesசமீபத்தில் திரைக்கு வந்த நேரம் படத்தில் நடித்தவர் நஸ்ரியா நசீம். அதைத்தொடர்ந்து திருமணம் என்னும் நிக்கா, நய்யாண்டி, ராஜா ராணி என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதில் தமிழில் அவர் கமிட்டான முதல் படமான திருமணம் என்னும் நிக்காவில் தற்போது தீவிரமாக நடித்துக்கொண்டிருக்கிறார் நஸ்ரியா.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் ஜெய். என்னதான் நஸ்ரியா மலையாளப் பெண்குட்டியாக இருந்தபோதும், நிறைய தமிழ் வசனங்களின் பொருள் புரியாமல் தடுமாறுகிறாராம். அப்போதெல்லாம் ஜெய்தான் அவரை தன் அருகில் உட்கார வைத்து வார்த்தைகளுக்கு விளக்கம் கொடுக்கிறாராம்.

ஜெய் கொடுத்த ஆதரவினால்தான் இப்படத்தில் என்னால் டயலாக்கை தெளிவாக உச்சரித்து, தேவையான பீலிங்ஸை வெளிப்படுத்தி நடிக்க முடிந்தது என்று நஸ்ரியாவே சொல்கிறார்.

அதோடு, இப்படத்தில் நடித்த நாட்களில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பாண்டியராஜன் ஸ்பாட்டில் தனது சொந்த காமெடிகளை எடுத்து விட்டு, மொத்த டீமையும் கலகலப்பாக்கிக்கொண்டேயிருந்தாராம்.

அதனால் திருமணம் என்னும நிக்கா படத்தில் எனக்கு சீரியசான வேடம் என்றலும், பாண்டியராஜன் சார் காமெடி பண்ணிக்கொண்டேயிருந்ததால், நடிக்கிற நேரம் போக மற்ற நேரங்களில் ஜாலியாக சிரித்துக்கொண்டேதான் இருந்தேன் என்கிறார் நஸ்ரியா நசீம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கேபிள் டிவி ஆபரேடர் கொலை… மனைவி உள்ளிட்ட மூவர் கைது!!
Next post விபச்சார வழக்கில் பரபரக்கப்பட்ட சானாகானின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!(PHOTOS)