போலியான முறையில் பிரித்தானிய வீசா பெற முயற்சித்த பெண் கைது!!

Read Time:1 Minute, 36 Second

17951272451956036148v2போலியான முறையில் பிரித்தானிய வீசா பெற்றுக்கொள்ள முயற்சித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். போலியான ஆள் அடையாளத்தை காண்பித்து வீசா பெற்றுக்கொள்வதற்காக குறித்த பெண் முயற்சித்துள்ளார் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் குறித்த பெண்ணைக் கைது செய்துள்ளனர்.

கணவருடன் இணைந்து கொள்வதற்காக இந்தப் பெண் வீசா கோரி விண்ணப்பித்திருந்தார். எவ்வாறெனினும், இந்த வீசா விண்ணப்பத் தகவல்களில் போலியான தகவல்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

போலியான முறையில் கடவுச் சீட்டைப் பெற்றுக் கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சந்தேக நபரின் வீசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், பத்து ஆண்டுகால பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மோசடியான முறையில் கடவுச் சீட்டைப் பெற்றுக் கொண்டமைக்காக வழக்குத் தொடரப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முழு நிர்வாணமாக நீச்சல் தடாகப் படப்பிடிப்பில் கேட் மோஸ்!! (PHOTOS)
Next post சுறாவின் தாக்குதலால் கையை இழந்த யுவதி சம்பியன்!!