30 ஏழை பெண்களின் மார்பக புற்று நோய்க்கான மருத்துவ செலவுகளை ஏற்ற ஹன்சிகா! – ஸ்பெஷ(PHOTOS)

Read Time:2 Minute, 30 Second

images (2)‘பார்க்க சின்னத்தம்பி குஷ்பு மாதிரியே இருக்கீங்க..’ என்ற வர்ணனைக்கு சொந்தக்காரரான நடிகை ஹன்சிகா மோட்வானி அவ்வப்போது மெய்யாலுமே சமூக சேவை பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மும்பையில் இதுவரை 22 குழந்தைகளை தத்தெடுத்து கல்வி உதவி வழங்கி வருகிறார்.கொல்கத்தாவில் ஒரு முதியோர் இல்லம் நடத்துகிறார்.இந்நிலையில் தற்போது 30 ஏழை பெண்களுக்கு மார்பக புற்று நோய்க்கான மருத்துவ செலவுகளை ஏற்றுள்ளார்.வெஸ்ட் கேன்சர் ரிசர்ச் பவுன்டேஷன் என்ற அமைப்பு பெண்கள் மார்பக புற்று நோய் குறித்த விழிப்புணர்வுக்காக சென்னை டேர்ன்ஸ் பிங்க் என்ற இயக்கத்தை துவங்கியுள்ளது. இதன் தூதுவராக ஹன்சிகா மோட்வானி நியமிக்கப்பட்டு உள்ளார்.இதற்கான அறிமுக விழாவில் பங்கேற்று பேசும் போது ”30 ஏழை பெண்களின் மார்பக புற்று நோய் சிகிச்சை செலவை ஏற்றுக் கொள்கிறேன்” என்று ஹன்சிகா மோட்வானி அறிவித்தார். ஹன்சிகா மூலம் சிகிச்சை பெறப்போகும் நோயாளிகளை சென்னை டேர்ன்ஸ் பிங்க் இயக்கத்தினர் தேர்வு செய்வார்கள் என்று அதன் நிறுவனர் ஆனந்தகுமார் தெரிவித்தார்.இது குறித்து ஹன்சிகா நிருபர்களிடம் கூறும் போது ”மார்பக புற்று நோய் விழிப்புணர்வு இயக்கத்தின் பணிகள் என்னை கவர்ந்தன. விழிப்புணர்வு மூலம் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும். எனவே நானும் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளேன் ”என்றார்.
மார்பக புற்று நோய் சிகிச்சைக்கு ஒரு பெண்ணுக்கு ரூ.3 லட்சத்துக்கு மேல் செலவாகும். 30 பெண்களுக்கும் ஹன்சிகா ரூ.1 கோடி வரை மருத்துவ செலவுகளை ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!images (4)
images (3)
hansika-hot-stills

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ் சினிமாவை விடப்போதில்லை- ப்ரணிதா சபதம்
Next post பிறந்து மூன்றே நாளான சிசுவை நரபலி கொடுத்த கொடூரம்