கூட்டமைப்பிற்குள் பிளவா?

Read Time:1 Minute, 54 Second

tna.sam-sanசெப்டம்பர் மாதத்தில் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படும் வட மாகாணசபை தேர்தலுக்கு முன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள் பிளவுபடும் அளவிற்கு கருத்து வேறுபாடுகள் அதிகரித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இலங்கை தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப், டொலோ, புளொட் மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி ஆகிய ஐந்து கட்சிகள் சேர்ந்து உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு. கூட்டமைப்பை தனியொரு அரசியல் கட்சியாக பதிவுசெய்வது தொடர்பாக இந்த கூட்டிலுள்ள கட்சிகள் பேசி வந்துள்ளன. எனினும் புதிய கட்சியின் பதவிகளை பகிர்வது தொடர்பாக இரா. சம்பந்தன் மற்றும் ஏனைய கட்சித் தலைவர்களிடையே கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன. தற்போது கருத்து முரண்பாடுகள் அதிகரித்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏனைய கட்சிகள் தமிழரசுக் கட்சியை புறந்தள்ளிவிட்டு தமக்குள் ஒரு தேர்தல் ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள எண்ணுவதாக கூறப்படுகின்றது. வட மாகாண தேர்தலை கருத்திற்கொண்டு கட்சி பிளவுபடுவதை தவிர்ப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு இரா. சம்பந்தனிடம் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கேட்டிருப்பதாக அறியப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பச்சிளம் குழந்தையை வல்லுறவுக்குட்படுத்திய பாதகனுக்கு சிறை
Next post கிளிநொச்சி விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலி