யாழில் குடும்பஸ்தரைக் காணவில்லையென முறைப்பாடு

Read Time:1 Minute, 19 Second

missing-001யாழ் கல்வியங்காடு, ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை காணவில்லை என அவரது மனைவி, மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் கோப்பாய் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார். 42வயதான பழனி முருகையா இராஜேந்திரன் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே காணாமல் போயூள்ளார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலய இணைப்பாளர் த.கனகராஜ் இன்று தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் வீட்டிலிருந்த கடைக்குச் செல்வதாக கூறிச்சென்ற கணவர் இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது மனைவி தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். மேற்படி நபர் கடந்த 2006ம் ஆண்டு வெள்ளை வானில் கடத்தப்பட்டு கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டிருந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடும்ப பிரச்சினை காரணமாக ரயிலில் பாய்ந்து தற்கொலை
Next post அகதிகளை அழைத்து வந்த இரு தமிழக மீனவர்கள் கைது