தமிழரசுக் கட்சி இணங்காவிட்டால் ஏனைய 4 கட்சிகளும் இணைந்து கூட்டமைப்பை பதிவூ செய்யூம் -வினோ எம்.பி
தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தனிக் கட்சியாக பதிவூசெய்யூம் விடயத்தில் தமிழரசுக் கட்சி இழுத்தடிப்பு செய்வதால் கூட்டமைப்பிலுள்ள நான்கு கட்சிகள் கூடி பதிவூ செய்யலாமா என்பது தொடர்பாகவூம்இ அது சாத்தியமானால் பதிவது தொடர்பிலும் ஆராய்ந்திருக்கின்றௌம் என வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். எனினும் இறுதிக்கட்டமாக நாம் தமிழரசுக் கட்சியூடன் பேசி முடிவூக்கு வருவதற்கு சந்தர்ப்பம் கொடுத்துள்ளோம். இது சாத்தியப்படாவிட்டால்இ நான்கு கட்சிகளும் இணைந்து எதிர்வரும் மாத இறுதிக்கிடையில் பதிவூசெய்வது என தீர்மானித்துள்ளோம் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பதிவூ விடயமாக அவரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று தேர்தலுக்காக பயன்படுத்துகின் றௌமே தவிர நிஜத்தில் தனித்தனிக் கட்சியாகவே இருக்கின்றௌம். சில விடயங்களில் கூட்டமைப்பாக இயங்குகின்றௌமே தவிர பெரும்பாலான விடயங்களில் தனித்தனி கட்சியின் நலன் சார்ந்தே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றௌம். எனவே கிராம மட்டத்தில் இருந்து கட்டமைப்புக்களை உருவாக்குவதானது எமது அரசியல் ரீதியிலான மக்களின் அபிப்பிராயங்களை கேட்பதற்கும் மக்களின் உணர்வூகளை பிரதிபலிப்ப தற்குமான திட்டங்களையூம் கொள்கை களையூம் வகுப்பதற்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை கட்சியாக பதிவூ செய்வது பயனுள்ளதாக இருக்கும். பதிவூ செய்யப்பட்டதன் பின்னர் எமக்குள் இருக்கும் வேறுபாடுகள் களையப்பட்டு அல்லது ஒவ்வொரு கட்சியூம் பிரிந்து இருப்பதால் உள்ள பிரச்சினைகள் நீக்கப்பட்டு ஒரே குரலாக ஒரே நிலையில் இருந்து பேசக்கூடியதாக இருக்கும். இது தொடர்பில் நாம் கடந்த காலத் தல் 5 கட்சிகளும் கூடி பதிவூ விடயம்இ அதி உயர் பீடம்இ நிதிக்குழுஇ தேர்தல் தொடர்பான குழு மற்றும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் குழுக்கள் அமைப்பது தொடர்பாக ஆராய்ந்திருக்கின்றௌம். ஆனால் தமிழரசுக் கட்சி எமக்கு நிபந்தனைகளை விதிப்பதும் காலம் தாழ்த்துவதுமான நடவடிக்கையை எடுக்கின்றது. அவர்கள் இதில் விருப்பமில்லாத நிலையில் இருப்பதும் அல்லது சாக்குபோக்கு சொல்வதும் எல்லோருக்கும் தெரிந்த விடயமாகும். எனவே நாம் தனித்தனியாக செல்ல முடியாது என்பதனால்இ தமிழ்த் தேசிய கூட்டமைப்பை கட்சியாக பதிவூ செய்யூம் விடயம் சாத்தியமற்று போகாதிருப்பதற்காக வேறு வழியின்றி நாம் இறுதியாக நான்கு கட்சிகள் கூடி பதிவூ செய்யலாமா என்பது தொடர்பாகவூம்இ அது சாத்தியமானால் பதிவது தொடர்பிலும் அல்லது வேறு எவ்வாறு இதனை முன்னகர்த்தி செல்லலாம் என்பது தொடர்பிலும் நாம் ஆராய்ந்திருக்கின்றௌம். ஆகவே இறுதிக்கட்டமாக நாம் தமிழரசுக் கட்சியூடன் பேசி முடிவூக்கு வருவதற்கு சந்தர்ப்பம் கொடுத்துள்ளோம். இல்லையேல் நாம் நான்கு கட்சிகளும் இணைந்து எதிர்வரும் மாத இறுதிக் கிடையில் பதிவூ செய்வது என தீர்மானித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Average Rating