கூட்டமைப்பின் பிரச்சாரம் பொய்யானதாம் – இராணுவம்

Read Time:1 Minute, 30 Second

Ani.Army-SLKவடக்கு காணிகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்து வரும் பிரச்சாரம் பொய்யானது என இராணுவம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த 4000 ஏக்கர் காணிகளில், 1500 ஏக்கர் காணிகள் பொதுமக்களிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார். பலாலி பிரதேசத்தில் பத்தாயிரம் ஏக்கர் காணியை படையினர் கைப்பற்றியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. எனினும், இந்தக் குற்றச்சாட்டானது அடிப்படையற்றது. யாழ்ப்பாணத்தில் அதி உயர் பாதுகாப்பு வலங்கள் எதுவும் கிடையாது. யாழ்ப்பாணத்தில் தற்போது அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்கள் தேசிய பாதுகாப்பை கருத்திற் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (வீடியோவில்) அரட்டை அரங்கம்..!!
Next post இனப்படுகொலை நடந்த போது தடுக்காத கருணாநிதி, இப்போது நாடகமாடுகிறார்!