ஜப்பானுக்குள் நுளைந்த ரஷ்ய போர் விமானம்!

Read Time:3 Minute, 7 Second

ANI.Flight.1ரஷ்ய போர் விமானங்கள் தமது வான் பகுதிக்குள் அத்துமீறி வந்துவிட்டு சென்றதாக குற்றம் சாட்டியுள்ளது, ஜப்பான். அதுவும், ரஷ்யாவால் பலவந்தமாக எடுத்துக் கொள்ளப்பட்ட தமது தீவுகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என ஜப்பானியர்கள் அமைதி பேரணி வைத்த தினத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது என ஜப்பான் குற்றம்சாட்டுகிறது. -neeRRu (வியாழக்கிழமை) இரு ரஷ்ய போர் விமானங்கள், ஜப்பானிய வான்பரப்பில் அத்துமீறி புகுந்த உடனே, ஜப்பானிய விமானப்படை விமானங்கள், அவற்றை துரத்துவதற்காக புறப்பட்டு சென்றன. ஆனால், அதற்குள் ரஷ்ய போர் விமானங்கள் ஜப்பானிய வான் பகுதியில் இருந்து வெளியேறி, பசுபிக் கடலுக்கு மேலாக பறக்க தொடங்கி விட்டன.

ஜப்பான் வெளியுறவு அமைச்சர், டோக்கியோவில் உள்ள ரஷ்ய தூதரை மாலை அழைத்து, தமது அதிருப்தியை தெரிவித்தார். ஆனால், ரஷ்யா, இந்த அத்துமீறல் நடந்ததை மறுத்துள்ளது. மாஸ்கோவில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு, “ஜப்பான் குறிப்பிடும் பகுதிக்கு அருகே எமது விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டது உண்மை. ஆனால், அந்த விமானங்கள் ஜப்பான் வான் பகுதிக்குள் செல்லவே இல்லை” என்று கூறியுள்ளது.

இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலத்தில், ஜப்பானுக்கு சொந்தமான சில தீவுகளை ரஷ்யா கைப்பற்றியது. அந்த தீவுகளை தம்மிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என ஜப்பானில் ஒவ்வொரு ஆண்டும் அமைதிப் பேரணி நடப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான அமைதிப் பேரணி இன்று நடைபெற்றது. அப்படியான தினத்தில், ரஷ்யா தமது பலத்தை காட்டுவதற்காக போர் விமானங்களை ஜப்பானுக்கு மேலாக பறக்க விட்டது என ஜப்பானிய மீடியாக்கள் சொல்கின்றன. இதற்கு முன், ரஷ்ய விமானம் ஒன்று ஜப்பான் வான் பகுதிக்குள் வந்த சம்பவம், கடந்த 2008 – ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 9 – ம் தேதி நடந்தது. அப்போது, உள்ளே வந்த விமானம், ரஷ்ய விமானப் படையின் Su-27 ரக விமானம் (மேலே போட்டோவை பார்க்கவும்). இன்று ஜப்பானுக்குள் பறந்ததாக ஜப்பான் கூறும் இரு விமானங்களும் இதே ரக விமானங்கள் தான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இவர்களுக்கு டிரஸ் இல்லை.. (PHOTOS)
Next post இலங்கை கிறிக்கெற் அணி தலைவியின் ரொமான்ஸ்! (Photos)