தமிழ் நாட்டு மீனவர்கள் மூவர் காப்பாற்றப்பட்டனர்

Read Time:2 Minute, 23 Second

Ind.tamilnaduகடலில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த தமிழ் நாட்டு மீனவர்கள் மூவர் நீர்கொழும்பு மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் நீர்கொழும்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் நாடு, உப்புத்துறை , கண்ணியாகுமரி சேர்ந்த அமல்ராஜ் (33 வயது), சேர்வியர் (49 வயது), ஜோய் (37 வயது) ஆகியோரே நீர்கொழும்பு – பிட்டிபனை பிரதேச மீனவர்களால் காப்பாற்றப்பட்டவர்களாவர்.

சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் தெரிவிக்கையில்; கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி தமிழ் நாடு தேங்காய் பட்டினம் துறைமுகத்திலிருந்து வள்ளம் மூலமாக மீன்பிடிப்பதற்கு நாங்கள் நால்வர் புறப்பட்டோம்.

அன்று இரவு அரபிக்கடலில் ஏற்;பட்ட புயல் காரணமாக எமது வள்ளம் மூழ்கியது. வள்ளத்தை பிடித்தபடி நாங்கள் இருந்தபோது எங்களுடன் இருந்த வருவா பிள்ளை (75 வயது) என்பவர் கடலில் மூழ்கி மரணமானார்.

நாங்கள் மூவரும் வள்ளத்தில் எங்களை கட்டிக்கொண்டு நான்கு தினங்களாக பசியுடன் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தோம்.கடந்த சனிக்கிழமை பகல் வேளையில் இலங்கை மீன்பிடிப்படகில் வந்த மீனவர்கள் எம்மை காப்பாற்றி, உண்ண உணவும் உடுக்க உடையும் தந்தனர்.

பின்னர் நீர்கொழும்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கிபட்டுள்ளோம் என்றனர்.

இந்திய தூதரக அதிகாரிகள் மீனவர்களை நாளை புதன்கிழமை பார்வையிடவுள்ளதாக நீர்கொழும்பு மீனவர் சங்க உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒன்பது மாத இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு முறை குழந்தைகளை பெற்ற இங்கிலாந்து பெண்!
Next post வவுனியாவில் தாயும் – மகனும் கைது!