கட்டாரில் மரணதண்டனையை எதிர்நோக்கியூள்ள இலங்கையரைக் காப்பாற்ற பிரயத்தனம்

Read Time:2 Minute, 2 Second

quatar-001கட்டாரில் மரணதண்டனையை எதிர்நோக்கியூள்ள இலங்கையை சேர்ந்த 22 வயதான வெங்கடாச்சலம் சுதேஸ்கரை விடுவிப்பதற்கான குருதிப் பணத்தை வழங்குவதற்கான நிதி உதவிக்கு ஆசிய மனித உரிமைகள் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. மிகவூம் வறிய குடும்பத்தைச் சேர்ந்த சுதேஸ்கர், ஒரு கைகலப்பில் கேரளாவை சேர்ந்த மற்றுமொரு இளைஞரை கொலைசெய்ததாக அவருக்கு கட்டாரில் மரணதண்டனை டிசம்பர் 31ம் திகதி விதிக்கப்பட்டது. ஆயினும் இறந்தவரின் குடும்பத்தோடு செய்யப்பட்ட சமரசத்தை அடுத்து இலங்கை ரூபாய் 35 லட்சம் குருதிப்பணமாகப் பெற்று சுதேஸ்கரை மன்னிக்க இறந்தவரின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆயினும்இ இப் பணத்தை திரட்டமுடியாத வறியநிலையில் உள்ள சுதேஸ்கர் குடும்பத்தினர் இது தொடர்பாக இலங்கை அதிகாரிகள் மற்றும் இலங்கை ஜனாதிபதியிடம் முறையிட்டும் பலன் கிட்டவில்லை என்று கூறியிருந்தனர். அதனையடுத்து தாமும் இலங்கை அரசாங்கத்திடம் இது குறித்து தொடர்புகொண்டதாகக் கூறும் ஆசிய மனித உரிமைகள் ஆணைய செயல் இயக்குனரான பசில் பெர்ணாண்டோஇ ஆனால் இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்திடம் இருந்தோ அல்லது ஜனாதிபதியிடம் இருந்தோ இந்த பணக்கொடுப்பனவூக்கான எந்தவிதமான உறுதி மொழியையூம் பெறமுடியாது போனதால், தாமே இந்தப் பணத்தை சேகரிக்க முன்வந்ததாக தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அவ்வப்போது கிளாமர் படங்கள்..
Next post வடக்கு அபிவிருத்தி தொடர்பில் பிரித்தானிய அதிகாரி மகிழ்ச்சி