மகளின் தோழியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய காமத் தந்தை
மகளுடன் பள்ளியில் படிக்கும் அவரது தோழியை பலாத்காரம் செய்தவர் குற்றவாளி என்று விரைவு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு: உத்தரப்பிரதேச மாநிலம் வாரனாசி அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கன்சிதா(15). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அங்குள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாள். அவளுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்தனர். இது கன்சிதாவுக்கு பிடிக்கவில்லை.இதனால் வீட்டில் யாருக்கும் தெரியாமல் டெல்லியில் உள்ள தனது தோழி சுனந்தாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தேடி வந்தார்.
டெல்லி ரயில் நிலையத்தில் கன்சிதாவை சந்தித்த சுனந்தா, மேற்கு டெல்லியில் உள்ள தங்களின் பண்ணை வீட்டுக்கு கன்சிதாவை அழைத்து சென்றார். அங்கிருந்த தனது தந்தை சூரியபிரகாஷிடம் பேசி கன்சிதாவுக்கு அங்கேயே ஒரு வேலை போட்டுக் கொடுத்தார். இதைத்தொடர்ந்து பண்ணை வீட்டு நிர்வாகத்தை கவனிக்கும் பொறுப்பு கன்சிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்தது.கடந்த ஆகஸ்ட் மாதம் பண்ணை வீட்டுக்கு சூரியபிரகாஷ் சென்றார்.
அப்போது பண்ணை வீட்டில் கன்சிதா மட்டுமே தனியாக இருந்தார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கன்சிதாவை சூரியபிரகாஷ் பலாத்காரம் செய்தார். பிறகு அவரை காரில் ஏற்றி வந்து டெல்லி ரயில் நிலையம் அருகே விட்டு விட்டு அங்கிருந்து சூரியபிரகாஷ் சென்று விட்டார். இதனால் மனம் உடைந்த கன்சிதா ரயில் நிலைய பிளாட்பாரத்தில் நின்று அழுது கொண்டிருந்தார்.இதை அங்கிருந்த ரயில்வே பொலிசார் பார்த்து விட்டனர். உடனே கன்சிதாவை ரயில்வே பொலிசார் பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் தன்னைப் பற்றிய எல்லா உண்மைகளையும் சொல்லி அழுதார். அதையே புகார் மனுவாக பொலிசார் ஏற்றுக் கொண்டு சூரியபிரகாஷ் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விரைவு கூடுதல் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி வீரேந்திர பட் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு: பிளஸ் 2 படித்து வந்த மாணவியை பலாத்காரம் செய்த சூரியபிரகாஷ் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்மானிக்கிறது.
பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் மனநிலை அடியோடு பாதிக்கப்பட்டு விடும். நிலைமை அப்படி இருக்க சம்பவம் நடந்த உடனேயே பொலிசில் கன்சிதா ஏன் புகார் செய்யவில்லை என்று குற்றவாளியான சூரியபிரகாஷ் கேட்பதில் எவ்வித நியாயமும் இருப்பதாக தெரியவில்லை.பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண், யாரையும் நம்ப மாட்டாள். நிலைமை அப்படி இருக்க பலாத்காரம் செய்தவுடன் ஏன் பொலிசில் புகார் செய்யவில்லை என்று அந்த குற்றச் செயலை செய்தவர் கேட்க எவ்வித உரிமையும் இல்லை.
மகளுடன் படிக்கும் சக மாணவி, மகளின் தோழி என்று கூட நினைக்காமல் பலாத்காரம் செய்தவரை மன்னிக்க முடியாது. எனவே சூரியபிரகாஷை குற்ற வாளி என்று நீதிமன்றம் உறுதி செய்கிறது. அவருக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு நீதிபதி வீரேந்தர் பட் தனது உத்தரவில் கூறியுள்ளார்.
Average Rating