சுவிஸில் 19வருடங்களுக்கு முன் கொலை ஒன்றை செய்த தமிழருக்கு இன்று தீர்ப்பு!

Read Time:2 Minute, 49 Second

ANI.switzerland_gm
சுவிஸில் 19 வருடங்களுக்கு முதல் கொலை ஒன்றை செய்த தமிழர் ஒருவருக்கு 19வருடங்கள் கடந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்நபர் பிரான்ஸிலிருந்து சுவிஸிற்கு வந்து கொலை செய்து விட்டு பிரான்ஸிற்கு தப்பி சென்றிருந்தார். பின்னர் பிரான்ஸிருந்து லண்டன் சென்று அங்கு வசித்து வந்த வேளையில் கடந்த இரு வருடங்களுக்கு முதல் லண்டனில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். இரு வருடங்களாக சுவிஸ் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த இவரின் வழக்கு நேற்று வியாழக்கிழமை முடிவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

1994ஆம் மே மாதம் ஏ1 நெடுஞ்சாலையில் வாகன தரிப்பிடத்தில் 41வயதுடைய தமிழர் ஒருவரின் சடலம் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. இவர் பேர்ண் நகரில் வசித்து வந்த தமிழர் என்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் ஒருவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்தது. இவர் தமிழர்கள் மத்தியில் வட்டிக்கு பணம் கொடுப்பதில் நன்கு அறியப்பட்ட பிரசித்தி பெற்றவராவார். பணத்திற்காகவே இக்கொலை நடந்திருக்கலாம் என நம்பபட்டது.

இக்கொலை தொடர்பாக ஏற்கனவே மூவர் கைது செய்யப்பட்டு 1998ஆம் ஆண்டு ஒவ்வொருவருக்கும் 14, 10, 5 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

ஆனாலும் பிரதான குற்றவாளி தலைமறைவாக வாழ்ந்து வந்த நிலையில் சுவிஸ் காவல்துறையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த விசாரணைகளின் பின் அந்நபர் லண்டனில் வசித்து வருவதை அறிந்து லண்டன் காவல்துறையினரின் உதவியுடன் இந்நபர் கடந்த இரு வருடங்களுக்கு முதல் கைது செய்யப்பட்டிருந்தார்.

26வயதில் கொலை செய்த இந்நபருக்கு தற்போது 45வயது. இன்று இவருக்கு பெரும்பாலும் 20வருடங்களுக்கு மேற்பட்ட தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காலம் கடந்தாலும் குற்றத்தை செய்தவர் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதற்கு இது உதாரணமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிளிநொச்சியில் மனைவியை வெட்ட கத்தியுடன் துரத்திய பிரதி அதிபர்
Next post மட்டக்களப்பில் தடம்புரண்டு ஆற்றுக்குள் விழுந்த வாகனத்திலிருந்து 20 பேர் காப்பாற்றப்பட்டனர்!