சர்வதேச தீவிரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணுவோருக்கு இரண்டாண்டு சிறைத் தண்டனை

Read Time:1 Minute, 28 Second

arrest.shackled-hands
சர்வதேச தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்களைப் பேணுவோருக்கு இரண்டாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கக் கூடிய வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களாக கருதப்படும் தலிபான், ஜிஹாத் மற்றும் அல் கய்தா போன்ற இயக்கங்களுடன் இலங்கையின் வடக்கு கிழக்கு மக்கள் தொடர்புகளைப் பேணி வருவதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இவ்வாறு தொடர்புகளைப் பேணும் தரப்பினருக்கு தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. குறிப்பாக இவ்வாறு தொடர்புகளைப் பேணியமை நிரூபிக்கப்பட்டால் இரண்டாண்டு கால கடூழிய சிறைத்தண்டனையும், பத்து லட்ச ரூபா அபராதமும் விதிக்கப்பட உள்ளது. இதற்கென பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளது. எதிர்வரும் மாதத்தில் இந்த சட்டத் திருத்தங்கள் தொடர்பில் பாராளுமன்றில் யோசனைத் திட்டங்கள் முன்வைக்கப்பட உள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பதுக்கி வைக்கப்பட்ட வெள்ள நிவாரணம் மீட்பு; மன்னார் ப.நோ.கூ.சங்கத்திற்கு சீல்
Next post பலாத்காரத்திற்கு உள்ளாகும் பெண்கள் அதை ஜாலியாக அனுபவிக்க வேண்டும்!