சிராணி சாதாரண பிரஜை தான் அவருக்கு பாதுகாப்பு அவசியமில்லை! -பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

Read Time:1 Minute, 33 Second

slk.siraana
சிராணி நாட்டின் சாதாரண பிரஜை தான் அவருக்கு பாதுகாப்பு அவசியமில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஷாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கான பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. எனினும் தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி பொலிஸ் பாதுகாப்பை சிராணி பண்டாரநாயக்க கோரியிருந்தார். இருப்பினும் சிராணி பண்டாரநாயக்க தற்போது இலங்கையின் சாதாரண பிரஜை என்ற அடிப்படையில் அவருக்கான பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் முன்னாள் பிரதம நீதியரசர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

சிராணிக்கு எதிராக குற்றப்பிரேரணை முன்வைக்கப்பட்டு அவர் ஜனாதிபதியினால் பதவி விலக்கப்பட்டு புதிய பிரதம நீதியரசர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சவுதியில் ஆகஸ்டில் இறந்தவரின் உடல் ஜனவரியில் இலங்கை வந்தது
Next post இன்றைய ராசிபலன்கள்:20.01.2013