கிறிக்கெற் வீரர் டில்சானின் காமக் கமரா!
கிறிக்கெற் நட்சத்திரம் ரி. எம். டில்சானுக்கு எதிராக அவரது அயல் வீட்டுக்காரி மிரிஹன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டு உள்ளார். டில்சானின் வீடு புறக்கோட்டையில் உள்ளது. அயல் வீட்டுக்காரியின் பெயர் ரேணுகா டி கொஸ்தா. இவரும், இவரது இரு பிள்ளைகளும் அயல் வீட்டில் வசித்து வருகின்றார். ரேணுகாவின் வீட்டில் நீச்சல் தடாகம் உள்ளது. ரேணுகாவும், மகளும் இத்தடாகத்தில் நீராடுகின்றமை வழக்கம்.
டில்சானின் வீட்டில் கண்காணிப்புக் கமரா பொருத்தப்பட்டு உள்ளது. இக்கமரா அயல் வீட்டுக்காரியில் தடாகத்தை நோக்கியதாக பொருத்தப்பட்டு உள்ளது. இதனால் தனிப்பட்ட இரகசியத் தன்மை கெட்டு விடுகின்றது என்று பொலிஸில் ரேணுகா முறையிட்டார். பொலிஸ் புலனாய்வாளர்கள் டில்சானின் இல்லத்துக்கு நேரில் சென்று சோதனைகள் செய்தனர். தடாகத்தில் நடக்கின்ற வரை கண்காணிக்கின்ற விதத்தில் கமரா பொருத்தப்பட்டு உள்ளது என உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.
ஆயினும் இவர்கள் கமராவின் வில்லைகளை வேறு ஒரு கோணத்துக்கு மிகவும் இலாவகமாக மாற்றி இருக்கின்றார். இதன் மூலம் டில்சானை குற்றவியல் வழக்கில் இருந்து காப்பாற்றி விட்டார்கள்.
ரேணுகாவின் வாக்குமூலத்தின்படி டில்சானும், டில்சானின் மனைவியும் வேண்டும் என்றே கமராவை தடாகத்தை நோக்கியதாக பொருத்தி இருக்கின்றனர், தடாகத்தில் நடக்கின்ற காரியங்களை காண்கின்றமைக்காகவே இவ்வாறு நடந்து உள்ளனர்.
ரேணுகாவின் கணவன் ஈராக்கில் தொழில் பார்த்தவர். கணவன் அனுப்பிய பணத்தில் 505 இலட்சத்துக்கு சொந்த வீடு வாங்கி, வசித்து வருகின்றார் ரேணுகா. 2010 ஆம் ஆண்டு இவ்வீட்டில் குடியேறினார்கள்.
ஆரம்பத்தில் இரு குடும்பங்களும் மிகுந்த நட்புடன்தான் இருந்து வந்தனர். ரேணுகாவின் கணவனை விருந்துபசாரங்களுக்குக்கூட பல தடவைகள் டில்சான் அழைத்துச் சென்று இருக்கின்றார். ஆனால் இவ்வீட்டை 400 இலட்சத்துக்கு வாங்குகின்ற விருப்பத்தை டில்சான் வெளிப்படுத்திய போதே முறுகல் ஆரம்பம் ஆகி விட்டது.
105 இலட்சம் ரூபாய் நட்டத்தில் வீட்டை விற்க ரேணுகாவும், பிள்ளைகளும் விரும்பவில்லை. ஆயினும் ரேணுகாவின் கணவரை டில்சானால் இணங்க வைக்க முடிந்தது.
இதில் ரேணுகாவின் குடும்பத்துக்குள் குழப்பம் நேர்ந்தது. ரேணுகாவின் கணவன் பிள்ளைகளையும், மனைவியையும் அடித்தும் விட்டார். இது சம்பந்தமாக ஒரு பொலிஸ் முறைப்பாடும் உள்ளது.
விடுமுறையில் நாட்டுக்கு வந்திருந்த ரேணுகாவின் கணவன் இக்குழப்பங்களால் உரிய நேரத்தில் ஈராக்குக்கு வேலைக்கு திரும்பிச் செல்ல முடியவில்லை. இதனால் வேலையை இழந்தார்.
டில்சானும், மனைவியையும் பல்கணிக்கு வந்து ரேணுகா குடும்பத்தை திட்டித் தீர்த்து உள்ளனர் என்று தெரிகின்றது.
இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒரு வருடத்துக்கு வீட்டை வெளிநாட்டவர் ஒருவருக்கு வாடகைக்கு கொடுத்து விட்டு நுகேகொடவுக்கு வாடகை வீடு எடுத்துப் போனார் ரேணுகா.
வாடகைக் காலம் முடிந்ததும் வீட்டுக்கு திரும்பி வந்தார்கள். பிரச்சினைகளும், குழப்பங்களும் மீண்டும் தலை தூக்கின. ஏராளமான பல வீடுகள் இங்கு உள்ளன, வேறு வீடு ஒன்றை பார்த்து வாங்குங்கள், இவ்வீட்டை விற்பதாக இல்லை என்று ரேணுகா முகத்தில் அடித்த மாதிரி டில்சானுக்கு சொல்லி விட்டார்.
ரேணுகாவின் இவை சம்பந்தப்பட்ட பொலிஸ் முறைப்பாடுகளை பொலிஸார் உண்மையில் உரிய கவனத்தில் கொண்டிருக்கவில்லையென குற்றம் சாட்டப்படுகின்றது.
டில்சானின் மனைவியிடம் ஊடகவியலாளர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது ரேணுகா என்று எவரையுமே தெரியாது என மஞ்சுளா டில்சான் தெரிவித்து உள்ளார்.
டில்சான் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு கிறிக்கெற் சுற்றுலா சென்று உள்ளார். இவரை எஸ். எம். எஸ் மூலம் தொடர் கொண்டபோது ரேணுகா என்பவரை தெரியாது என்றும் நாடு திரும்பிய பிற்பாடு அவதூறுக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பார் என்றும் பதில் தந்து உள்ளார்.
Average Rating