பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதாக அவுஸ்திரேலியா அறிவிப்பு

Read Time:1 Minute, 46 Second

australian.flag
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பில் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது, உறுதி செய்திருந்தார் என உயர்ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை மனித உரிமை விவகாரங்கள் குறித்து இலங்கையுடன் கனடா பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வுகளை எட்ட முடியும் என அவுஸ்திரேலியா பரிந்துரை செய்துள்ளது. நல்லிணக்க முனைப்புக்கள், குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை அடிப்படையாக அமையும் என தெரிவித்துள்ளது.

இதேவேளை, மனித உரிமை நிலைமைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படாவிட்டால் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் பங்கேற்க மாட்டார் என அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த கனேடிய குடியுரிமை அமைச்சர் ஜேசன் கெனி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜனவரி 25-ம் தேதி விஸ்வரூபம் திரைக்கு வருகிறது
Next post களுத்துறையில் மாணவனும் மாணவியும் நிர்வாண கோலத்தில் கைது!