மறைந்த தாதி ஜெசிந்தாவுக்காக பிரார்த்தனை..

Read Time:1 Minute, 53 Second

மகப்பேற்று சுகவீனம் காரணமாக இளவரசர் வில்லியத்தின் மனைவி கேம்பிரிஜ் சீமாட்டி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை அறைக்கு, ஏமாற்றி வந்த ஆஸ்திரேலிய வானொலி அறிவிப்பாளர்களின் தொலைபேசி அழைப்பை இணைத்த மருத்துவ தாதியின் மரணத்துக்காக லண்டனில் ஒரு தேவாலய பிரார்த்தனை நடந்தது.

கழுத்தில் தொங்கிய நிலையில் அந்த தாதியான ஜெசிந்தா சல்தானா சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

அந்த பிரார்த்தனைப் பூசையின் பின்னர் அவருக்கு தமது அஞ்சலியை செலுத்திய ஜெசிந்தா சல்தானாவின் கணவரும் பிள்ளைகளும், தமக்கு பல தரப்பிலும் இருந்து கிடைத்த உதவிகளுக்காக நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

இளவரசர் சார்ள்ஸ் மற்றும் மகாராணியார் ஆகியோர் அழைக்கிறார்கள் என நினைத்து, இரண்டு ஆஸ்திரேலிய வானொலி அறிவிப்பாளர்களின் தொலைபேசி அழைப்பை, சல்தானா, அவர்களுக்கு இளவரசியின் உடல்நிலை குறித்த விபரங்களை கூறுவதற்காக, இன்னுமொரு ஊழியருக்கு மாற்றியிருந்தார்.

ஜெசிந்தா சல்தானாவின் உடல் விமானம் மூலம் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. திங்களன்று மங்களூருக்கு அடுத்துள்ள உடுப்பியில் இறுதிச் சடங்குகள் நடக்கும் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்னும் 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழிவதற்கு வாய்ப்பில்லை: விஞ்ஞானிகள் உறுதி
Next post அம்பாறை மாவட்டத்திலுள்ள கிராமங்களில் உணரப்படும் நில அதிர்வு…