இங்கிலாந்தில் வெளிநாட்டில் பிறந்தோரின் எண்ணிக்கை உயர்வு…

Read Time:2 Minute, 18 Second

பிரிட்டனின் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதியில் சென்ற ஆண்டு நடத்தப்பட்ட மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இப்பகுதியிலே வாழுகின்ற வெளிநாட்டில் பிறந்தவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.

இங்கிலாந்து வேல்ஸிலே வாழுகின்ற வெளிநாட்டில் பிறந்தவர்களின் எண்ணிக்கை என்பது கடந்த பத்து வருடங்களில் முப்பது லட்சம் அதிகரித்துள்ளது. அவர்களின் எண்ணிக்கை தற்போது ஏழுபத்தைந்து லட்சங்களாக உள்ளது. பிரிட்டிஷ் வெள்ளையர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 80 சதவீதமாக இருக்கிறது. ஸ்காட்லாந்து நீங்கலாக ஜக்கிய ராஜ்ஜியத்தின் மக்கள் தொகை 5.6 கோடியாக உள்ளது.

பிரிட்டனில் வாழும் வெளிநாட்டினரில் மிக அதிகமானோருக்கு பிறப்பிடமாக விளங்கும் முதல் 5 நாடுகள் இந்தியா, போலந்து, பாகிஸ்தான், அயர்லாந்து, மற்றும் ஜெர்மனி ஆகியவை என்று தெரியவந்துள்ளது.

இங்கிலாந்திலும் வேல்ஸிலும் வாழும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2001ஆம் ஆண்டு செய்யப்பட்ட முந்தைய கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போது நாற்பது லட்சத்தால் குறைந்துள்ளது. மதம் இல்லை என்று தெரிவித்துள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே நாற்பது லட்சமாக அமைந்துள்ளது. முந்தைய கணக்கெடுப்பிலிருந்து இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இந்து, இஸ்லாம் மற்றும் சீக்கிய மதங்களைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை சற்றே அதிகரித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post “எமக்கு குழிபறிக்க நினைத்தால், சம்பந்தனின் குருதி குடிப்போம்” புலி ஆதரவு ஊடகங்கள் எச்சரிக்கை!
Next post ட்விட்டர் உலகில் போப்பும் இணைந்தார்…