யுத்த இடம்பெற்ற வலயங்களில் தற்கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு..!

Read Time:2 Minute, 25 Second

யுத்தம் இடம்பெற்ற வலயங்களில் தற்கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான வடக்கு மக்கள் மன அழுத்தங்களையும் உளவியல் பிரச்சினைகளையும் எதிர்நோக்கி வருவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். யுத்தத்தின் பின்னரான அழுத்தங்கள், மன உலைச்சல், உளவியல் தாக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு உளவியல் பிரச்சினைகளினால் யுத்த வலய மக்கள் தொடர்ந்தும் அல்லலுறுவதாக வன்னி மனநல ஆலோசகர் டொக்டர் தயாழினி தியாகராஜா தெரிவித்துள்ளார். மன உலைச்சலின் காரணமாக அதிகளவானோர் தற்கொலை முயற்சியில் இறங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக அதிகளவான பெண்கள் தற்கொலை செய்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாள்தோறும் சராசரியாக நான்கு பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உளவியல் நோய்களினால் பாதிக்கப்பட்ட 500 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகத் தெரிவக்கப்படுகிறது. உளவியல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பலர் சிகிச்சைப் பெற்றுககொள்வதில்லை எனக் குறிப்பிடப்படுகிறது. வன்னி உள்ளிட்ட யுத்தம் இடம்பெற்ற வலயங்களில் போதியளவு மனநல மருத்துவர்கள் சேவையாற்றவில்லை எனவும், இதனால் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் நிலைமை காணப்படுவதாகவும் சுட்டி;காட்டப்படுகிறது. யுத்தம் காரணமாக ஏற்பட்ட உளவியல் தாக்கம் முழுமையாக களைவதற்கு இன்னும் ஒன்றிரண்டு தலைமுறைகள் தேவைப்படலாம் என டொக்டர் தயாழினி தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமலையில் பல இடங்களில் கடல் நீர் உள்வாங்கியது ‐இரண்டாவது நாளாக கடும் கடல் சீற்றம்..!
Next post 6 ஆம் மாடியிலிருந்து விழுந்து உயிர் தப்பிய 18 மாத குழந்தை..!