எலும்புகளின் பயன்கள்..!

Read Time:1 Minute, 49 Second

எலும்புகள் இருப்பதினால் தான் நாம் நிற்கிறோம், நடக்கிறோம், கை, கால்களை நீட்டுகிறோம். முக்கியமா உருவ அமைப்பைப் பெறுவதற்கு இந்த எலும்புகள் ரொம்ப உதவி செய்யுது. இல்லைன்னா வெறும் சதைக்குவியலா ஒரே இடத்துல தான் கிடப்போம். நம்ம உடம்புல வலுவான பகுதியா இருப்பதும் இந்த எலும்பு தான்.  நம்ம உடம்புல இருக்குற கால்சியத்துல 99 சதவீதமும், பாஸ்பரஸ்ல 88 சதவீதமும் இந்த எலும்புகள்ல தான் இருக்குதாம். மனிதனோட உடல்ல இருக்குற மிகப்பெரிய எலும்பு, அவனோட தொடை எலும்பு. இது வீடு கட்டப் பயன்படும் கான்கிரீட் கலவையைவிட பலமா இருக்குமாம். நம்முடைய உயரத்துல 25 சதவீத அளவுக்கு, அதாவது கால் பங்கு உயர அளவுக்கு இந்தத் தொடை எலும்பு காணப்படும்.  குழந்தை பிறக்கும்போது மொத்தம் 300 எலும்புகள் இருக்கும். ஆனால், வளர்ந்ததும் 206 எலும்புகள் மட்டுமே இருக்கும். வளரும்போது சில எலும்புகள் ஒன்று சேர்ந்து விடுவதே அதற்குக் காரணம். காதின் நடுவுல இருக்குற எலும்பு தான், மனித உடல்ல இருக்குற மிகச்சிறிய எலும்பு. இது ஒரு அரிசியோட பாதி அளவு தான் இருக்குமாம். எலும்புகள் பலமாக இருக்க, கால்சியம் சத்து அவசியம். இது பாலில் அதிகமாக இருக்கு.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முன்னாள் புலி உறுப்பினர்கள் நடத்தப்படும் விதம் தொடர்பில் சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டும்‐டியூ.குணசேகர..!
Next post 2030-க்குள் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள்-நாசா..!