முன்னாள் புலி உறுப்பினர்கள் நடத்தப்படும் விதம் தொடர்பில் சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டும்‐டியூ.குணசேகர..!
முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் நடத்தப்படும் விதம் தொடர்பில் சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டுமென சிறைச்சாலைகள் அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கு முன்னர் முன்னாள் போராளிகளை அரசாங்கம் நடத்தி வரும் விதம் குறித்து கவனிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் போது சரணடைந்த போராளிகளுக்கு மறுவாழ்வு அளித்து அவர்களை சமூகத்தில் இணைத்த ஒரே நாடு இலங்கை என அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் போராளிகளுக்கு தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக போராட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவர்கள் மீளவும் பரீட்சைக்கு தோற்றுவதற்கு வழிவகை செய்துள்ளதுடன், அவர்களுக்கு தனியார் பிரத்தியேக வகுப்புக்களையும் அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் போது சரணடைந்த 11696 விடுதலைப் புலி உறுப்பினர்களில் காயமடைந்த சகலருக்கும் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சரணடைந்த பெரும்பான்மையான பெண் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் மனிதாபிமான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் கூர்ந்து கவனிக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating