வடக்கு கிழக்கு மக்கள் காணி உறுதிகளை சமர்பிக்காது கடனுதவி பெற்றுக்கொள்வதற்கான விசேட சட்டவிதிகளை அமுல்படுத்த நடவடிக்கை‐மத்திய வங்கி..!

Read Time:1 Minute, 32 Second

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் உள்ள மக்கள் தமது காணி உறுதிகளை சமர்பிக்காது, கடனுதவியை பெற்றுக்கொள்வதற்கான விசேட சட்டவிதிகளை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் பிரதேசத்தில் உள்ள நிதி நிறுவனங்களிடம் கடனுதவியை பெற்றுக்கொள்ள மக்கள், கிராம சேவகரின் சான்றிதழ், சத்திய கடிதம் ஆகியற்றை சமர்பிப்பது போதுமானது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். காணி உறுதிகள் இல்லாதவர்களுக்கும் கடனுதவியை வழங்குமாறு பணிக்கும் சுற்றுநிருபம் வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். கடந்த காலம் முழுவதும் இடம்பெற்ற யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கில் உள்ள பெருபாலான மக்களின் காணி உறுதிகள் இல்லாமல் போயுள்ளன. இதனால் இந்த மக்கள் வங்கிகளில் கடனுதவியை பெற்றுக்கொள்வது பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதுபானங்களின் விலை அதிகரிப்பு..!
Next post பிரபாகரனின் சகோதர, சகோதரிகளை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு சிவாஜிலிங்கம் அழைப்பு..!