இலங்கை மக்களின் சராசரி ஆயுட் காலம 74 ஆக உயர்வு..!

Read Time:1 Minute, 21 Second

இலங்கை மக்களின் சராசரி ஆயுட் காலம் 74 ஆக உயர்வடைந்துள்ளதென சுகாதார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டின் புள்ளி விபரத் தகவல்களின் அடிப்படையில் இலங்கை மக்களின் ஆயுட் காலம் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆண்களின் ஆயுட்காலம் 69 ஆகவும், பெண்களின் ஆயுட் காலம் 76 ஆகவும் உயர்வடைந்துள்ளதெனக் குறிப்பிடப்படுகிறது. முதியவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து செல்வதனால் அவர்களை பாராமரிப்பதற்கு முறையான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டுமென சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. வைத்தியசாலைகளில் முதியவர்களுக்கென தனியார் பிரிவுகளை உருவாக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்குலக நாடுகளைப் போன்று இலங்கையில் முதியவர்களுக்கு விசேட பராமரிப்பு வதிகள் இன்னமும் ஏற்படுத்தப்படவில்லை என குறிப்பிடப்படுகிறது.
 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு தெரிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கம்..!
Next post வடக்கில் தமிழ் மக்களினால் புதைக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்கள் மீட்கப்பட்டு நீதிமன்றத்தினூடாக உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது‐ஜெனரல் உபய மெதவல..!