வானம் படத்தில் சிம்புவுடன் நடிக்கச் சம்மதித்த பரத்..!
இரண்டு முன்னணி நாயகர்கள் இணைந்து நடிப்பதென்பது தமிழ் சினிமாவைப் பொறுத்த மட்டில் குதிரைக் கொம்பாகவே இருந்து வருகின்றது. அவ்வப்போது முன்னணி நடிகர்களை இணைத்து நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடக்கும். ஆனால் இறுதி வரை கை கூடாது. யாராவது முன்னணி நடிகர்கள் தொடக்கி வைத்தார்களெனின் ஏனையவர்கள் தொடர்வார்கள். அந்த காரியத்திற்கு பிள்ளையார் சுழி போடுபவர் யார்? பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற கேள்வி கோடாம்பாக்கத்தில் நீண்ட காலமாக இருந்து வருகின்றது. தற்போது மணி கட்டத் தயாராகிவிட்டார் சின்னத்தளபதி பரத். தமிழ் சினிமாவில் வேகமாக வெற்றி நடிகர் என்ற பெயருடன் வலம் வந்த இவரது அண்மைக்காலத் திரைப்படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. இந்த நிலையில் பிற மொழிப்படங்களிலும் கவனம் செலுத்தி வந்தார். தற்போது சிலம்பரசன் முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘வானம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பரத் சம்மதம் தெரிவித்துள்ளார். வானம் படம் தெலுங்கில் வெளியாகிய வேடம் படத்தின் ரீ-மேக் ஆகும். இந்தப் படத்திற்கான பூஜை கடந்த வாரம் இடம்பெற்றது. கதாநாயகியாக அனுஸ்கா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஒளிப்பதிவு நீரவ் ஸா, இசை யுவன் சங்கர் ராஜா. திரைக்கதை வசனம் எழுதி இயக்குபவர் கிறிஸ். தெலுங்கு வேடம் படத்தில் பரத் ஏற்றிருந்த மனோஜ் என்ற பாத்திரத்தையே தமிழிலும் ஏற்கவுள்ளார். எனவே சரத்குமார், ஆர்யா வரிசையில் இனி பரத்தும் இணைகின்றார். இந்தப் புது முயற்சி, தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே ஒற்றுமையை உருவாக்குகின்றதா, அல்லது வேற்றுமையை தோற்றுவிக்கின்றதா என்பதை பொறுத்திருந்த தான் பார்க்க வேண்டும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating