ஆப்கானிஸ்தானில் விமான விபத்து-43 பேர் பலி?

Read Time:1 Minute, 36 Second

ஆப்கானிஸ்தானில் 43 பயணிகளுடன் சென்ற விமானம் மலைப் பகுதியில் விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் இருந்த அனைவரும் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது. தலைநகர் காபூலில் இருந்து வடக்கு ஆப்கானி்ஸ்தானில் உள்ள குண்டுஸ் நகருக்கு பமீர் ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த விமானம் இன்று காலை சென்று கொண்டிருந்தது. சலாங் மலைப் பகுதியில் சென்றபோது அந்த விமானம் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது. அந்த விமானம் மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கி விட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவி்த்துள்ளது.

அதிலிருந்த 38 பயணிகள், 2 விமானிகள் உள்ளிட்ட விமான சிப்பந்திகள் பலியாகியிருக்கலாம் என்று தெரிகிறது. பயணிகளில் பலர் வெளிநாட்டினர் என்று கூறப்படுகிறது.

இந்த விமானத்தி்ன் சிதறிய பாகங்களை கண்டுபிடிக்கவும் உடல்களை மீட்கவும் அமெரிக்கா தலைமையிலான நேடோ படைகளின் உதவியை ஆப்கானி்ஸ்தான் அரசு கோரியுள்ளது. இதையடுத்து நேடோ ஹெலிகாப்டர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மைக்கேல் ஜாக்சனின் தங்கை ஜேனட்டுக்கு புதுக்காதலர்
Next post விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஓராண்டு நினைவஞ்சலி!!! (வீடியோ)