வடக்கிலிருந்து 500பேர் பொலிஸ் சேவையில் இணைப்பு..முதல்கட்டமாக 367பேருக்கு பயிற்சி

Read Time:2 Minute, 18 Second

வடக்கின் யாழ் மாவட்டத்திலிருந்த பொலிஸ்சேவைக்கு 500பேர் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு களுத்தறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது. அதன்படி முதற்கட்டமாக 367பேர் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அடுத்தகட்டப் பயிற்சிக்கு எஞ்சியவர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர். பயிற்சிகளின் பின்னர் இவர்கள் வடமாகாண பொலிஸ் நிலையங்களில் கடமையில் அமர்த்தப்படவுள்ளனர். வடபகுதியிலிருந்து சுமார் மூன்று தசாப்தங்களின் பின்னர் முதல் முறையாக பொலிஸ் சேவைக்கு ஆட்களை சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். யாழ் மாவட்டத்திலிருந்து தகுதிவாய்ந்த இளைஞர்களை பொலிஸ் சேவைக்கு சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கடந்தாண்டு கோரப்பட்டிருந்தன இதன்படி சுமார் 6000விண்ணப்பங்கள் பொலிஸ் திணைக்களத்திற்கு கிடைத்திருந்தன குறிப்பிடப்பட்ட வயதெல்லையையும் விஞ்சிய வயதெல்லையுடையவர்களும் விவாகமானவர்களும் வி;ண்ணப்பித்திருந்தனர். 6000 விண்ணப்பங்களுள் தகுதி வாய்ந்தவர்கள் எனக் கருதப்பட்ட 1500பேர் மட்டுமே நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர் 2009ம் ஆண்டு 6ம்மாதம் 26ம்திகதி நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையின் பயனாக 500பேர் மட்டுமே பொலிஸ்சேவைக்கு சேர்த்துக் கொள்ளப் பட்டுள்ளனரென பொலிஸ் தலைமையக ஆட்சேர்ப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஐ.எம்.கருணாரட்ன தெரிவித்துள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜி15 நாடுகளின் தலைமைத்துவம் இலங்கை ஜனாதிபதி வசம்..!
Next post வீட்டுப் பயன்பாட்டிற்காக ரோபோ தயாரிக்கும் சீன விவசாயி