வாக்கெடுப்பின் மூலம் ஐ.தே.கட்சி உறுப்பினர்களின் பதவிகள் நிர்ணயிக்கப்படும் -செயற்குழு தீர்மானம்

Read Time:1 Minute, 52 Second

ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய பதவிகள் அனைத்தும் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கப்படும் என கட்சி செயற்குழு அறிவித்துள்ளது காத்திரமான முறையில் கட்சியின் புதிய பதவிகள் உருவாக்கப்படவுள்ளதாகவும் அவை காத்திரமான முறையில் கட்சியின் வளர்ச்சிக்கு பங்களிப்பை வழங்ககூடிய வகையில் மாற்றியமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது கட்சியின் உயர் பதவி நியமனம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த கட்சி யாப்பு விதிகள் திருத்தி அமைக்கப்படவுள்ளது கட்சியாப்பு விதிகளை மாற்றியமைப்பது குறித்து ஆராயும் நோக்கில் விஷேடகுழுவொன்றை செயற்குழு நியமித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா தலைமையில் இந்தக்குழு இயங்கவுள்ளதாகவும் விரைவில் இந்த குழு பரிந்துரைகளை முன்வைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது பதவிகளை பகிர்ந்து கொள்வதனை விடவும் கட்சியில் ஓர் புரட்சியை ஏற்படுத்துவதே கட்சியின் பிரதான இலக்கு என செயற்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை தாம் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகத்தயார் எனவும் கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க செயற்குழு கூட்டத்தில் அறிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ”செக்ஸ் ஒப்பந்தமா.. எனக்கு ஒன்னும் தெரியாது”: நித்யானந்தா வாக்குமூல வீடியோ
Next post தடுப்புகாவலிலுள்ள இளைஞர்களின் எண்ணிக்கையை வெளியிடுக .அநுரகுமார திஸாநாயக்க