இந்தோனேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மட்டக்களப்பு அரசஅதிபர் சந்திப்பு

Read Time:1 Minute, 46 Second

இந்தோனேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் லாபர் உசைன் நேற்று உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு மட்டக்களப்புக்கு சென்றிருந்தார். மட்டக்களப்பு சென்றிருந்த அவர் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின்போது மாவட்டத்தின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பாக லாபர் உசைன் கேட்டறிந்து கொண்டதுடன், இந்தோனேசியாவிற்கும் இலங்கைக்குமிடையிலான நட்புறவை மேம்படுத்தும் வழிமுறைகள் தொடர்பிலும் ஆராய்ந்துள்ளார். அதேவேளை வாவியினாலும், கடலாலும் சூழப்பட்டு சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய பல இடங்களை அபிவிருத்தி செய்யும் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசஅதிபர் உயர்ஸ்தானிகரிடம் சில கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளார். அதற்கு இணக்கம் தெரிவித்த இந்தோனேசியாவிற்கான இலங்கை உயர்ஷ்தானிகர் லாபர் உசைன் இந்த மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய தேவையான முதலீடுகளை வழங்குவதற்கு இந்தோனேசிய அரசாங்கத்திடம் சிபார்சு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஈபிடிபியினரால் கொலை அச்சுறுத்தல்.. சாவகச்சேரி நீதவானுக்கு இராணுவ பாதுகாப்பு
Next post அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான யோசனை 118 வாக்குகளால் நிறைவேற்றம்