ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரால் டெய்லிமிரர் ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளார்

Read Time:1 Minute, 51 Second

டெய்லிமிரர் ஊடகவியலாளர் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு;ள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மகரகம புற்றுநோய் வைத்தியசாலையில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ தலைமையில் இன்று வைபவமொன்று இடம்பெற்றுள்ளது இதுதொடர்பாக செய்திச்சேகரிக்க சென்ற டெய்லி மிரர் பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் சந்துன் ஜயசேகர ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரால் தாக்கப்பட்டுள்ளதால் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் டெய்லி மிரர் பத்திரிகையில் ஜனாதிபதி செய்திகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சந்துன் இன்று இடம்பெற்ற வைபவம் இடம்பெற்ற இடத்திற்கு செல்ல முயற்சித்த போது அவரை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் தடுத்து நிறுத்தியுள்ளனர் இதனால் அவருக்கும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதனையடுத்தே அவர் தாக்கப்பட்டதாக டெய்லிமிரர் பத்திரிகையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் தாக்குதலுக்கு உள்ளான சந்துன் ஜயசேகரவின் கழுத்தில் கீறல் காயங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஊடகவியலாளர் பிரகீத் காணாமல் போய் இன்று 100நாட்கள்
Next post இன்றுகாலை முதல் பொன்சேகா உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்