அரசியல் தஞ்சம்கோரி மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 75இலங்கையர்கள் தொடர்பில் விசாரணை

Read Time:1 Minute, 42 Second

அரசியல் தஞ்சம்கோரிய 75 இலங்கையர்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் பொருட்டு அவர்கள் தடு;த்துவைக்கப்பட்டுள்ள பகுதிக்கு மலேசியாவுக்கான பிரதி இலங்கை உயர்ஸ்தானிகர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அரசியல் தஞ்சம்கோரி அவுஸ்திரேலியாவுக்கு படகில் சென்றுக் கொண்டிருந்த போது மலேசியப் பொலிஸாரால் இவர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டு முகாம் ஒன்றில் தடு;த்து வைக்கப்பட்டுள்ளனர் தடுத்துவைக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்காக மலேசியாவுக்கான பிரதி இலங்கை உயர்ஸ்தானிகர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 6பெண்களும் 8சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர் இவர்கள் சில தினங்களுக்கு முன்னர் மலேசிய கடற்பகுதியில் சேதமடைந்த படகொன்றில் தத்தளித்துக் கொண்டிருந்த போது அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்ததாக ரொய்டர் செய்திச்சேவை தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரி பயணித்ததாக மலேசிய பொலிஸாரிடம் அவர்கள் தெரிவித்துள்ளதாகவும் அறியவருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ் பொதுசன நூலக சிற்றுண்டிச்சாலையை தென்னிலங்கைச் சிங்கள வர்த்தகர்களுக்கு வழங்குமாறு மாநகர முதல்வர் நிர்ப்பந்தம்
Next post அரசியல் சாசனத் திருத்தங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும்?