ஜெனரல் பொன்சேகாவுக்கு அரசாங்கத்தால் சன்மானமாக வழங்கப்பட்ட காணிக்குள் செல்ல பாதுகாப்பு அமைச்சு தடை

Read Time:1 Minute, 56 Second

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர பெரும் பணியாற்றிய அப்போதைய இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் திறமையை வெளிக்காட்டிய அவருக்கு சன்மானமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட காணிக்குள் நுழைய பாதுகாப்ப அமைச்சு தடைவிதித்துள்ளது. நகரஅபிவிருத்தி அதரிகாரசபையினால் நாரஹேன்பிட்டியில் உள்ள காணியொன்றில் வழங்கப்பட்டிருந்த 20பேர்சஸ் காணியை பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா பார்வையிடச் சென்ற போது அதனுள்ளே விஷேட காவல்துறையினர் அரண் அமைத்திருந்ததாகவும் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஜகாதிபதி மகிந்த காணிகளை முப்படைத் தளபதிகளுக்கு சன்மானமாக வழங்கியிருந்தார். இதன்படி பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட காணியின் சட்டபூர்வ ஆவணங்கள் அவரிடமே உள்ளது இருப்பினும் அரசாங்க தரப்பினர் அவருக்கு எதிராக மேற்கொள்ளும் இந்நடவடிக்கையானது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும் என ஜனநாயக தேசிய கூட்டணியின் பொதுச்செயலாளர் விஜித ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளார். நகர அபிவிருத்தி அதிகாரசபை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டதை அடுத்து இடம்பெற்றுள்ள முக்கிய சம்பவம் இதுவாகுமெனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 75 இலங்கை அகதிகள் மலேசியாவில் கைது
Next post இந்திய தூதரக பெண் அதிகாரி கைது; காதல், காசுக்காக நாட்டை காட்டி கொடுத்த துரோகம்!!