மெக்சிகோ பள்ளிகளில் நொறுக்கு தீனிக்கு தடை

Read Time:1 Minute, 28 Second

மெக்சிகோ நாட்டு பள்ளிகளில், நொறுக்கு தீனிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மெக்சிகோ நாட்டில், பெரியவர்கள் 70 சதவீதம் பேர், உடல் பருமனுடன் காணப்படுகின்றனர். இதே போல 5 வயது முதல் 11 வயதுடைய சிறுவர்கள், 70 சதவீதம் பேர் குண்டாக இருக்கின்றனர்.கடந்த 20 ஆண்டுகளில், சிறுவர்கள் குண் டாவது மும்மடங்கு அதிகரித்துள்ளது. இதை தவிர்க்க, பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டும் பலனில்லை.எனவே, மாணவர்களின் உடல் எடையை குறைப்பதற்காக, பள்ளிகளில் நொறுக்கு தீனிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாது, பள்ளிகளில் தினமும் குறைந்தபட்சம் அரைமணி நேரம், உடற்பயிற்சி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதற்கான சட்ட மசோதா, மெக்சிகோ பார்லிமென்ட்டில் கடந்த வாரம் நிறைவேற்றப் பட்டது. இந்த மசோதாவுக்கு, அனைத்து எம்.பி.,க்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.பள்ளி வளாகத்திலோ, பள்ளிக்கூடமுள்ள பகுதியிலோ நொறுக்கு தீனிகள் விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாரட் விபத்து: இளவரசர் பிலிப்ஸ் காயம்
Next post அலங்கார விளக்குகளுக்கு தடை: சோயப் குடும்பத்தினர் எரிச்சல்