எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் அடுத்த ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டம் சமர்பிக்கப்படும் -நிமல் சிறிபாலடி சில்வா

Read Time:1 Minute, 48 Second

எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உபதலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்துக்கான இடைக்கால கணக்கறிக்கை இம்மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில் அரசியலமைப்பில் ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இன்னுமொரு இடைக்கால கணக்கறிக்கையை எதிர்வரும் மூன்று காலத்துக்காக சமர்பிப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை அரசாங்கத்தை யாரும் விமர்சிக்க தேவையில்லை எனத் தெரிவித்துள்ள அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மாத்திரம் இந்த தேர்தலில் பெறும்பான்மைiயாக 124 ஆசனங்களைப் பெற்றுள்ளதாகவும் இதனால் ஆட்சியமைக்க எந்தவொரு கட்சியினதும் ஒத்துழைப்போ துணையோ தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் தாம் தமது கூட்டமைப்பில் உள்ளவர்களைத் தவிர்ந்து போவதற்கு தயாரில்லை என தெரிவித்துள்ள அவர் தமது கூட்டமைப்பில் உள்ளவர்களை தாம் ஆதரிப்பதாகவும் மேலும் பலரையும் இணைத்துக் கொண்டே இந்த அரசியல் பயணத்தை முன்நகர்த்தி செல்லவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விரைவில் அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் -பாதுகாப்புச் செயலாளர்
Next post எனக்கு எதிராக ரஞ்சிதா ஏதும் சொல்ல மாட்டார்-நித்யானந்தா