புதிய அரசாங்க அமைச்சரவை நாளை ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

Read Time:2 Minute, 18 Second

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கான சத்தியப்பிரமாணம் நாளை ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ முன்னிலையில் இடம்பெறவுள்ளது இந்தமுறை 40க்கம் குறைவான அமைச்சர்களே அமைச்சர்கள் குழுவில் இடம்பெறுவார்கள் என அரசியல் தரப்புகள் தெரிவிக்கின்றன கடந்த அமைச்சரவையில் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சுக்கள் இந்தமுறை இல்லாது செய்யப்படுவதுடன் பிரதியமைச்சர்கள் மாத்திரம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது அந்தவகையில் பிரதியமைச்சுக்களும் 40ற்கும் குறைந்தளவிலேயே இருக்கும் எனவும் அரசியல் தரப்புகள் தெரிவிக்கின்றன இந்தமுறை அமைச்சரவையில் அதிகளவான விருப்பு வாக்குகளை பெற்ற பஷில் ராஜபக்ஷ மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் மாத்திரமே புதிததாக இணைந்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த முறை அமைச்சு பதவிகளில் வகித்த அமைச்சர்களது பதவிகள் பல மாறுவதுடன் சில அமைச்சர்களுக்கு மாத்திரமே இந்த முறையும் அதே அமைச்சுப் பதவிகள் கிடைக்கும் தகவல்களின்படி பஷில் ராஜபக்ஷவுக்கு சுற்றுலாத்தறை மற்றும் துறைமுக பொதுவானூர்த்தி சேவை அமைச்ச பதவி வழங்கப்படவுள்ளது ஜீ.எல்.பீரிஸ் வெளிநாட்டலுவல்கள் அமைச்சராகவும் குமாரவெல்கம போக்குவரத்து அமைச்சராகவும் நியமிக்கப்படுவதுடன் மின்சக்தி எரிசக்தி பாட்லி சம்பிக்க ரணவக்கவும் செயற்படவுள்ளதாகவும் அறியவருகிறது பந்துல குணவர்தன மற்றும் மைத்திரிபால சிறிசேன போன்ற முன்னாள் அமைச்சர்களுக்கு முன்னர் வகித்த அமைச்சு பதவிகளே வழங்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை பிரதமராக ஜெயரத்னே பதவியேற்பு- சபாநாயகர் ராஜபக்சே அண்ணன்
Next post ருக்மன் சேனாநாயக்க கட்சித் துணைத்தலைவர் பதவியிலிருந்து விலகினார்