இலங்கை பிரதமராக ஜெயரத்னே பதவியேற்பு- சபாநாயகர் ராஜபக்சே அண்ணன்
ராஜபக்சேவின் தீவிர விசவாசியும், இலங்கை சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான டி.எம்.ஜெயரத்னே, இலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ளார். அதேபோல சபாநாயகராக ராஜபக்சேவின் அண்ணன் சமல் ராஜபக்சே பொறுப்பேற்றுள்ளார். சுதந்திராக் கட்சியில் ராஜபக்சேவுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் ஜெயரத்னே. கடந்த அமைச்சரவையில் இவர் தோட்டத்துறை அமைச்சராக இருந்தார். தற்போது இவரை பிரதமராக்கியுள்ளார் ராஜபக்சே.
78 வயதான ஜெயரத்னே, நேற்று அதிபர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் நாட்டின் 20வது பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.
கம்போலா தொகுதியிலிருந்து கடந்த 1970 ஆண்டிலிருந்து வெற்றி பெற்று வருபவர் ஜெயரத்னே. போஸ்ட் மாஸ்டராக இருந்து அரசியலுக்கு வந்தவர் ஜெயரத்னே என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜபக்சே அண்ணனுக்கு சபாநாயகர் பதவி:
இதற்கிடையே, இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக சமல் ராஜபக்சே தேர்வாகியுள்ளார். இன்று கூடிய புதிய நாடாளுமன்றத்தில் சமல் ராஜபக்சே புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சமல் ராஜபக்சே, மகிந்த ராஜபக்சேவின் அண்ணன் ஆவார். இவரது மகன் சசீந்திர ராஜபக்சே, ஊவா மாகாண முதல்ராக இருக்கிறார். சமல், கடந்த அமைச்சரவையில் துறைமுகம் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர்.
சபாநாயகராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 225 எம்.பிக்களுக்கும் ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 225 உறுப்பினர்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு 144 இடங்கள் உள்ளன. இது மூன்றில் இரண்டு பங்குக்கு 6 இடங்கள் குறைவாகும்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு 60 இடங்களும், இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 14 இடங்களும் கிடைத்துள்ளன.
பொன்சேகாவின் ஜனநாயக தேசியக் கூட்டணிக்கு வெறும் 7 இடங்களே கிடைத்தன.
விடுதலை செய்ய கோரிய பொன்சேகா:
இந் நிலையில் இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா, தன்மை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரினார்.
இலங்கையின் 7வது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை தொடங்கியது. இதில் கலந்துகொள்ள பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் வரப்பட்ட அவர், அங்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பதவிப்பிரமானம் எடுத்துக் கொண்டார்.
பின்னர் அவர் பேசுகையில், என் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. சட்டத்துக்கு புறம்பாக நான் சிறையில் அடைக்கப்பட்டு பலியாக்கப்பட்டேன். என்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரினார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating