ஈராக்கில் பாஸ்ரா மார்க்கெட் பகுதியில் கார்குண்டுத் தாக்குதல்: 28 பேர் பலி
ஈராக்கில் உள்ள பாஸ்ரா மார்க்கெட் பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை கார்குண்டுத் தாக்குதலில் 28 பேர் பலியாகினர். ஈராக் தலைநகர் பாக்தாத்தை அடுத்து அங்கு இரண்டாவது பெரிய நகரமாகக் கருதப்படுவது பாஸ்ரா நகரமாகும். மக்கள் நடமாட்டம் மிகுந்த இந்த பாஸ்ரா நகரின் சந்தைப் பகுதியில் நேற்று முன்தினம் பிற்பகல் வேளையில், ஒரு காரில் நிறைய வெடிமருந்துப் பொருட்களை ஏற்றிய தற்கொலைப் படைத் தீவிரவாதி ஒருவன், அக்காரை வேகமாக ஓட்டி வந்து வெடிக்கச் செய்தான். இந்த திடீர் கார்குண்டு வெடிப்பால் அந்த இடமே ரத்தக்களறியானது.
மக்கள் நடமாட்டம் மிகுந்த அந்த மார்க்கெட் பகுதியில் கார் குண்டு வெடித்ததால் 28 பேர் உடல்சிதறி பரிதாபமாக பலியாயினர். 62 பேர் பலத்த ரத்தக் காயங்களுடன் உயிர் தப்பினர். இருப்பினும் இந்த கொடூரத் தாக்குதலுக்கு யார் காரணம் என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஆனால் சமீபகாலமாகவே பாஸ்ரா நகரில் வன்முறை வெறியாட்டங்களும், தீவிரவாதத் தாக்குதல்களும் நடந்து வருவதாக போலீஸ் கேப்டன் முஷ்தக் காதீம் தெரிவித்தார்
மேலும் ஷியாப் பிரிவு முஸ்லீம்கள் அதிகமாக வசித்துவரும் இந்நகரில் கடந்த வாரம்தான் பிரதமர் நௌரி அல்_மாலிக்கி வன்முறை வெறியாட்டங்களை தடுக்கும்பொருட்டு 1 மாத கால அவசரநிலை பிரகடனத்தை அறிவித்திருந்தார். மேலும் ஜோர்டானியனில் பிறந்து வளர்ந்த சதிகாரன் அபு முஸாப் அல்_ஷர்க்காவி, ஷியாப்பிரிவு முஸ்லீம்களை கொல்வதற்காக, ஈராக்கின் சன்னிப் பிரிவு அராபியர்களை சந்தித்த ஒருநாள் கழித்து இந்த தாக்குதல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் அல்_ஷர்க்காவியின் அல்_கொய்தா படையினர்தான் ஈராக்கில் மிகவும் பயங்கரமான பல தாக்குதல்களை நடத்தியிருப்பதாகத் பொறுப்பேற்றுள்ளனர். அவர்கள் நடத்திய தாக்குதலில் மட்டும் இதுவரை 100_க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியிருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
இது தவிர்த்து, ரஷ்யத் தூதரக அதிகாரி ஒருவர் ஈராக்கில் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் 4 தூதரக ஊழியர்கள் கடத்தப்பட்டிருப்பதாகவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேற்றும் கூட ஷியாப்பிரிவு முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் சதார் நகரத்திற்கு அருகில் உள்ள ஒரு ஏரியாவில் தகவல் தொடர்பு தொடர்பான பணிகளை கவனிப்பதற்காக ஒரு மினி பஸ்ஸில் சென்ற ஊழியர்களை குறிவைத்து தீவிரவாதி ஒருவன் நடத்திய தாக்குதலில் 4 பேர் பலியானதாகவும் 2 பேர் காயமடைந்ததாகவும் கலோனல் ஹாசன் சாலோப் தெரிவித்தார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...