மொண்டநிக்ரோ நகரம் தனிஅரசுப் பிரகடனம்.

Read Time:1 Minute, 35 Second

Serbia.Flag.jpgமொண்டநிக்ரோ தலைநகரான பொட்கொரிக்கோவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கூடிய சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் இதற்கான பிரகடனம் வெளியிடப்பட்டது. அந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 6 இலட்சத்து 50 ஆயிரம்.

முன்னைய யூகோஸ்லோவியா 1990-களில் சிதைந்த பின்னர் யூகோஸ்லோவியா வில் இணைக்கப்பட்டிருந்த 4 நாடுகள் தனியரசுப் பிரகடனத்தை வெளியிட்டன. சேர்பியாவும் மொண்டநிக்ரோவும் இணைந்து 2003 ஆம் ஆண்டு வரை யூகோஸ்லேவியா கூட்டமைப்பாகவும் அதன் பின்னர் 2003 ஆம் ஆண்டு முதல் சேர்பியா-மொண்டநிக்ரோ கூட்டமைப்பாகவும் இயங்கின.

அதன் பின்னர் சேர்பியக் கூட்டமைப்பிலிருந்து விலகி தனியரசாக இயங்குவது குறித்து மொண்டநிக்ரோ மக்களிடத்தில் மே 21 ஆம் நாள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தனியரசாகப் பிரிந்து சென்று இயங்க 55.5 விழுக்காட்டு மக்கள் வாக்களித்தனர். மொண்டநிக்ரோ மக்களினது தெரிவை சேர்பியாவும் ஏற்றுக் கொண்டுள்ளது. இதையடுத்து தனியரசுப் பிரகடனம் வெளியிடப்பட்டது. குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அமெரிக்க கடற்படை அதிகாரிகளின் குடாநாட்டு விஜயம்
Next post ஆஸ்லோ பேச்சில் முன்னேற்றம் இருக்காது புலிகள் கருத்து