இலங்கை அகதிகளை ஏற்க அவுஸ்திரேலியா மறுப்பு இந்தோனேசிய முகாமில் தடுத்து வைக்க முயற்சி
அவுஸ்திரேலிய சுங்கப்பிரிவினரால் காப்பாற்றப்பட்ட 78 அரசியல் புகலிடம் கோருவோரும் எக்காரணம் கொண்டும் அவுஸ்திரேலியாவுக்குள் அழைத்துவரப்படமாட்டார்கள் என அந்நாட்டில் வெளிவிவகார அமைச்சர் ஸ்ரீபன் ஸ்மித் தெரிவித்துள்ளார். மேற்படி அரசியல் தஞ்சம் கோருவோர் அவுஸ்திரேலியாவிலிருந்து இந்தோனேசியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் இந்தோனேசியா அவர்களை பொறுப்பேற்க மறுத்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் அவுஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் ஸ்ரீபன் ஸ்மித் அவுஸ்திரேலியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் ஓர் ஒப்பந்தம் உள்ளது அதற்கமைய கடற்பகுதியில் காப்பாற்றப்படும் மக்கள் இந்தோனேசியாவுக்கே அனுப்பி வைக்கப்படுவார்கள். அதுவே தொடரும் என கூறியுள்ளார். மேலும் படகில் இருக்கும் இலங்கையர்கள் எந்த நாட்டுக்கு செல்வது என அவர்கள் விண்ணப்பிக்க முடியாது அவர்களுக்கு அந்த விண்ணப்பத்தை விடுக்க முற்றுமுழுதான உரிமை இருக்கலாம் ஆனால் அவர்கள் ஆழ்கடலில் இருந்து மீட்கப்பட்டவர்கள் என்பதால் அது அவர்களின் தெரிவாக முடியாது. கடந்த 10தினங்களுக்கு முன்னர் மேற்படி 78பேரும் இந்தோனேசிய கடற்பகுதியில் வைத்து அவுஸ்திரேலியாவின் ஓசியானிக் விக்கிங் என்ற சுங்கப்பிரிவு கப்பலினால் மீட்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் இந்தோனேசியாவுக்கே அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து அந்நாட்டு மாகாண ஆளுநர் இந்தோனேசியா அகதிகளை குவிக்கும் நாடல்ல என தெரிவித்து அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவுஸ்திரேலியா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. இதேவேளை இந்தோனேசியாவில் உள்ள டஞ்சாங் பினாங் குடிவரவு தடுப்பு முகாமில் மேற்படி அகதிகளை தங்கவைக்கும் வகையில் அவுஸ்திரேலியா கப்பல் அங்குள்ள கடற்படை தளத்திற்கு செல்லக்கூடுமென இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவுஸ்திரேலியாவுக்குள் வருவதை தடுக்கும் முகமாகவே இவ்வாறான கடும்போக்கை அந்நாடு கடைப்பிடித்து வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating