பலத்த கடல் கொந்தளிப்பையும் பொருட்படுத்தாமல் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக செல்லும் தமிழர்கள்
கடந்த சில நாட்களாக கடல் கொந்தளிப்பு பலமாக இருந்தபோதும் அதனையும் பொருட்படுத்தாமல் இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக சென்றவண்ணம் உள்ளனர். மன்னாரிலிருந்து நேற்று (03.06.2006) மேலும் 207 பேர் தமிழகம் சென்றுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளி, பாலையூற்று ஆகிய பகுதிகளிலிருந்தே இவர்கள் இடம்பெயர்ந்து சென்றுள்னர். தமிழ்நாட்டின் தனுஷகோடி, இராமேஸ்வரம் ஆகிய பகுதிகளை சென்றடைந்திருக்கும் இந் 57 குடும்பங்களை சேர்ந்த 207 பேரையும் பொலிஸார் மண்டபம் முகாமுக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதுவரை தமிழகம் சென்றுள்ள இலங்கை தமிழ் அகதிகள் தொகை 2 ஆயிரத்து 772 என தெரிவிக்கப்படுகிறது.
அகதிகளாக வருபவர்களிடம் கடவுச்சீட்டுக்கள் இருப்பதாகவும் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் திட்டத்துடன் இவர்களில் சிலர் வந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக கடுமையான கடல் கொந்தளிப்பதால் மீன்பிடி தொழிலாளர்கள் கூட கடலுக்கு செல்வதில்லை ஆனால் அகதிகள் கடற்கொந்தளிப்பு குறித்து கவலைப்படாமல் சிறிய படகுகளில் தமிழகம் சென்றுகொண்டிருக்கின்றனர். திருகோணமலையிலிருந்து இந்தியா செல்வதற்காக வந்த குடும்பங்கள் மன்னார் பேசாலை சென்மேரிஸ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 50 பேர் வியாழக்கிழமை அங்கிருந்து வெளியேறியுள்ளனர். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமையும் நேற்றும் மேலும் 107 பேர் அங்கிருந்து வெளியேறிச் சென்றுவிட்டனர் இவர்கள் தமிழ்நாட்டுக்கு செல்லும் நோக்கத்துடனேயே வெளியேறியிருக்க வேண்டும் என இவர்களை மன்னாரில் தங்கவைத்து அடிப்படை தேவைகளை கவனித்து வந்த அரசு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பேசாலை சென்மேரிஸ் பாடசாலையில் 117 அகதிகள் எஞ்சியுள்ளனர். ஏற்கனவே பயனம் செய்த படகு சிலாபம் கடலில் மூழ்கிய வேளையில் சிங்கள மீனவர்களால் காப்பாற்றப்பட்ட 18 பேரும் பேசாலை சென்மேரிஸ் பாடசாலையிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் புனித லோறன்ஸ் மகாவித்தியாலயத்திலும் 50 அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழகம் செல்வதிலேயே குறியாக உள்ளனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...